அம்னோ இறைவன் தேர்வு செய்தது என்கிறார் ரீசால்

அம்னோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமான மலேசியாவை விடுவிப்பதற்கும் தேர்வு செய்யப்பட்ட மலாய் இனத்தை மேம்படுத்தவும்  இறைவன் தேர்வு செய்த கட்சி என்று அம்னோ இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் கூறுகிறார்.

“நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம்  mukhtarin-கள் தேர்வு செய்யப்பட்டவர்கள்,” என அவர் அம்னோ தலைவர் உரை மீது நிகழ்ந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போது கூறினார்.

ஆகவே மக்கள் வேறு விதமாக தேர்வு செய்ய முடிவு செய்தாலும் அல்லது மனிதர்கள் என்ற முறையில் சொந்தத் தேர்வுகளைச் செய்வதற்கு உரிமை இருந்தாலும் தாங்கள் இறைவன் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.”

இங்கு கூடியுள்ள பேராளர்கள் தேர்வு செய்யப்பட்ட மலேசிய நிலத்தில் வாழ்கின்ற மலாய்க்காரர்கள் ஆவர் என்பதும் மலேசியாவை விடுவித்து அம்னோ நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதும் இறைவனுடைய தேர்வாகும் என்றார் அவர்.

எல்லா அரசாங்கங்கள் மீதும் உண்மையான அதிகாரத்தைக் கொண்டவன் இறைவனே என்று விளக்கிய அவர், தாம் தேர்வு செய்தவர்களுக்கே அதிகாரத்தை இறைவன் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்தி, மேம்படுத்தி, அவர்களுக்கு கௌரவத்தைக் கொடுத்தது அம்னோ என்பதை ரீஸால் மலாய்க்காரர்களுக்கு நினைவுபடுத்தினார்.

இஸ்லாத்தின் கீழ் மலாய்க்காரர்களை அம்னோ ஒன்றுபடுத்தியுள்ளது

அம்னோ வருவதற்கு முன்பு மலாய்க்காரர்கள் எப்படி இருந்தனர் ?

மலாய்க்காரர்கள் அம்னோ வருவதற்கு முன்பு ஜாவா, பஞ்சார், சபா மலாய்க்காரர்கள், இந்திய முஸ்லிம்கள்என பிளவுபட்டிருந்த மக்களைக் கொண்ட  இனமாக இருந்தனர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.

இஸ்லாத்தின் கீழ் மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்தியது அம்னோவே என்றும் அவர் சொல்லிக் கொண்டார்.

மலாய் பழக்க வழக்கங்களை பின்பற்றுகின்ற மலாய் மொழியைப் பேசுகின்ற ஒரு முஸ்லிம், மலாய்க்காரர் என அரசமைப்பு விதிகள் வரையறுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

TAGS: