பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வீட்டுக்கு முன்பு ‘குதத்தைக் காட்டும் ஆட்டத்தை’ நடத்தப் போவதாக அரசாங்க சார்பு அரசு சாரா அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
“அன்வார் தமது குதத்தைக் காட்டினால் நாங்கள் எங்களுடையதை அவரது வீட்டுக்கு முன்னால் காட்டுவோம், சரியா இல்லையா ?” என மலேசிய ஆயுதப் படை முன்னாள் வீரர்கள் சங்கத் தலைவர் முகமட் அலி பாஹாரோம் தமது 100 ஆதரவாளர்களிடம் வினவினார்.
அப்போது அவர்கள் ‘சரி’ என பரபரப்பாகப் பதில் அளித்தனர்.
(Kalau dia tonggeng lagi, kita akan tonggeng di depan rumah dia, betul tak betul?)
“நாம் அவருக்கு எச்சரிக்கை கொடுப்போம் சரியா இல்லையா ? மக்களுக்கு உதவ களத்தில் கடுமையாக உழைக்கும் பிஎன் (பாரிசான் நேசனல்) தலைவர்களை அவமானப்படுத்த வேண்டாம், சரியா இல்லையா ?” என அவர் தொடர்ந்து வினவினார்.
அலி திஞ்சு என்று அறியப்படும் அலி ஏற்கனவே மே 15ம் தேதி பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட ‘குதத்தைக் காட்டும் ஆட்டத்துக்கு’ தலைமை தாங்கினார்.
அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினுக்கும் ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அம்னோ பொதுப் பேரவை நிகழும் இடத்துக்கு வெளியில் பேரணி நடத்திய “Gabungan NGO Ali Tinju” என அடையாளம் கூறப்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்புக்கு அவர் தலைமை தாங்கினார்.