“உண்மையில் ஆயுதப் படைகளில் எத்தகைய மக்கள் உள்ளனர் ? நமக்கு இது போன்ற ‘மூத்த சகோதரர்கள் இருந்தால்’ நமக்கு எதிரிகளே வேண்டாம்”
‘குதத்தைக் காட்டும் ஆட்டக்காரர்கள்’ அன்வாரைக் குறி வைக்கின்றனர்
நம்பாதவன்: இந்த மனிதர் மலேசிய ஆயுதப் படைகளுக்கு ஒர் அவமானச் சின்னம். அவரது மூளையும் குதமும் இடம் மாறி விட்டன.
சுவாத்: நமது ஆயுதப் படைகளுக்கு நாம் இது போன்ற ஆட்களைச் சேர்த்தால் நாம் நீர்மூழ்கிகள் போன்றவற்றை வாங்குவதை மறந்து விடலாம். இந்த நாட்டின் தற்காப்புக்குச் சேர்க்கப்பட்டும் ஆட்கள் கோமாளிகளாக இருக்கும் போது தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு நமது பணத்தை விரயம் செய்ய முடியாது.
ஆயுதப் படைகளில் சேருவதற்கான தகுதிகள் தான் என்ன ? ஆட்களைச் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் அறிவாற்றல் சோதனையும் சேர்க்கப்பட வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்_40c3: அத்தகைய ‘நாட்டின் காவலர்கள்’ இருக்கும் போது இந்த நாடு அச்சம் கொள்ளவே தேவை இல்லை. புதிய தாக்குதல் துப்பாக்கிகளும் கவச வாகனங்களும் நீர்மூழ்கிகளும் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தேவையே இல்லை. பெர்சே, ஹிம்புனான் ஹிஜாவ், சுவாராம், டிஏபி, பாஸ், பிகேஆர் உட்பட நாட்டின் கூட்டு நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழும் எல்லா எதிரிகளையும் அவர்கள் தங்கள் குதங்களைக் காட்டியே முறியடித்து விடுவார்கள்.
இது என்ன ?: இத்தகைய மக்கள் நமது நாட்டைத் தற்காத்தார்களா ? அவர்கள் நமது நாட்டுக்கு அவமானச் சின்னங்கள்.
மாஹாஷித்லா: முகமட் அலி பாஹாரோம் அவர்களே, நீங்களும் குதத்தை ஆட்டும் உங்கள் சகாக்களும் நாட்டுக்கும் ஆயுதப் படைகளில் பணியாற்றும் இளையோருக்கும் அவமானச் சின்னங்களாகும். சண்டையாக இருந்தாலும் விவாதமாக இருந்தாலும் நாம் எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும்.
நமது அண்டை நாடுகளான சிங்கப்பூர், இந்தோனிசியா அல்லது தாய்லாந்துடன் நமக்குப் பிரச்னைகள் இருந்தால் நாம் குதத்தைக் காட்டுவதில்லை. நாம் பேச்சுக்களில் ஈடுபடுகிறோம். அது தான் நாகரீகம்.
உங்களைப் போன்ற தலைவர்கள் இருக்கும் போது வெள்ளைக் கொடியை உயர்த்தி விடுவதே கௌரவமானது.
KnockKnock: தாங்கள் இறைவானால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என அம்னோ கூறிக் கொள்கின்றது. இத்தகைய மக்களையா இறைவன் தேர்வு செய்துள்ளான் ?
ஜேம்ஸ்_3392: ஒய்வு பெற்ற அந்த மனிதர்களுக்கு வெட்கமே இல்லையா என என் பிள்ளைகள் கேட்கின்றனர். அவர்களுக்கும் பிள்ளைகள் இருப்பது நிச்சயம். தங்கள் தந்தையரின் நடத்தை பற்றி அந்தப் பிள்ளைகள் என்ன நினைக்கின்றனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.