பக்காத்தான் ரக்யாட்டின் செராமாவுக்குச் சென்றதற்காக கூட்டரசு பிரதேச இஸ்லாமிய துறை (ஜாவி) அதிகாரிகளால் பதவி நீக்கப்பட்ட லாபுவான் தற்காலிக ஆசிரியை ஒருவருக்கு அம்னோவில் சேர்வதற்கான விண்ணப்பப் பாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சமய ஆசிரியையான குவாட்ருன் நாடா முகம்மட் லட்ஃபி, ஒரு செனட்டருமான அம்னோ தலைவர் ஒருவர் தம்மை அழைத்து அறிவுரை கூறிய இரண்டு நாட்கள் கழித்து அவ்விண்ணப்பப் பாரம் தனது பள்ளிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
அரசு ஊழியர் என்ற முறையில் அவர் அம்னோ நடவடிக்கைகளில் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று அந்த செனட்டர் சொன்னதாகவும் குவாட்ருன் கூறினார்.