கடந்த வாரம் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேராளர்கள் ஆற்றிய ஆவேசமான போர்க்கால பேச்சுக்கள் பற்றிப் பக்காத்தான் ராக்யாட் கவலைப்படவில்லை .
அவ்வாறு தெரிவித்த பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் , மக்களைப் பாதிக்கின்ற விஷயங்களை விவாதிக்கத் தவறியதின் மூலம் மக்களிடமிருந்து தான் விடுபட்டுள்ளதை அது காட்டியதே அதற்குக் காரணம் எனச் சொன்னார்.
“அவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தனர். விலை உயர்ந்த சுருட்டுக்களைப் புகைத்தனர். கூட்டத்தின் போது ஐந்து நட்சத்திர அறைகளில் ஒய்வு எடுத்துக் கொண்டனர். பல மில்லியன் ரிங்கிட்டுக்களுக்குச் சொந்தமான அம்னோ தலைவர்களுக்கும் களத்தில் உள்ள மக்களுக்கும் இடையில் தொடர்பே இல்லை.”
“பொருளாதார சிரமங்கள், வேலை வாய்ப்பின்மை, வேகமாக அதிகரிக்கும் விலைகள், மலிந்து விட்ட ஊழல்கள், வறுமை நிலை ஆகிய மக்களைப் பாதிக்கின்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி அவர்கள் விவாதிக்கவே இல்லை.”
என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது பற்றி மட்டுமே அவர்கள் பேசினார்கள். அதனால் நான் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் காட்டப்பட்ட வெறும் அகங்காரத்தைப் பற்றி நான் கவலைப்படவே இல்லை,” என்றார் அவர்.