பிகேஆர் பலவீனமாக இருப்பதால் டிஏபி-க்கு மலாய் ஆதரவு கூடுகின்றதா ?

பினாங்கில் குறிப்பாக கெப்பாளா பாத்தாஸ் போன்ற தலைநிலப் பகுதிகளில் டிஏபி செல்வாக்கு கூடி வருவதாக பினாங்கு டிஏபி மாநாட்டில் பேசிய பேராளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

1978ம் ஆண்டு தொடக்கம் கெப்பாளா பாத்தாஸ் தொகுதி எம்பி-யாக முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட்  படாவி இருந்து வருகின்றார்.

அந்தத் தொகுதியில் டிஏபி கிளைகள் எண்ணிக்கை ஆதரவு காரணமாக இரண்டிலிருந்து 12 ஆகக் கூடியுள்ளது என கெப்பாளா பாத்தாஸ் பேராளர் முகமட் சைபுல் இஸ்மாயில் கூறினார்.

கெப்பாளா பாத்தாஸ் அம்னோ கோட்டை எனக் கருதப்படும் தொகுதி ஆகும்.

“கெப்பாளா பாத்தாஸுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் கட்சிக்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். நாங்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை என்றாலும் கட்சித் தலைவர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்து வருகின்றது,” என முகமட் சைபுல் விவாதத்தின் போது கூறினார்.

அவரது கருத்துக்கள் பலருக்கு வியப்பை அளித்துள்ளன. ஏனெனில் கெப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பெனாகா, பெர்த்தாம், பினாங் துங்கால் ஆகியவை அம்னோவுக்குப் பாதுகாப்பான தொகுதிகள் எனக் கருதப்படுகின்றன. அவற்றில் வாக்காளர்களில் 75 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்.

அம்னோ: டிஏபி வலுவாக உள்ளது பிகேஆர் பலவீனமாக உள்ளது

நிபோங் தெபாலில் டிஏபி செல்வாக்குக் கூடுவது சாத்தியம் என பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ஷேக்ஹுசேன் மைடின் கூறியுள்ளார். காரணம் முன்னாள் துணைப் பிரதமர் வழி நடத்துக் பிகேஆர் திறமையாக  இயங்கவில்லை. பக்காத்தானில் அது ‘உறங்கும் தோழராக இருக்கிறது’ என்றார் அவர்.

“பிகேஆர் அதன் வேலையைச் செய்யவில்லை. பினாங்கில் டிஏபி தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமானால் பிகேஆர் வெற்றி பெறுவதை டிஏபி உறுதி செய்ய வேண்டும்,” என்றும் அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

2008 தேர்தலில் டிஏபி 19 இடங்களையும் பிகேஆர் 9 இடங்களையும் பாஸ் ஒர் இடத்தையும் வென்றன. அம்னோ 11 இடங்களைப் பிடித்தது. கெரக்கான், மசீச ஆகியவற்றுக்கு ஒர் இடம் கூட கிடைக்கவில்லை.

பினாங்கில் வரும் தேர்தலில் பிகேஆர் எந்த இடத்தையும் வெல்லுமானால் அது டிஏபி உதவியுடன் மட்டுமே சாத்தியமாகும். ஆகவே அடுத்த தேர்தலில் டிஏபி கூடுதல் இடங்களைக் கோருவது நல்லது. காரணம் பினாங்கில் உள்ள ஒவ்வொரு பிகேஆர் தொகுதியும் பிஎன் வெற்றி பெறப் போகும் இடமாகும்.”

ஆனால் ஷேக் ஹுசேனின் கருத்த மறுத்த பெனாகா டிஏபி தலைவருமான முகமட் சைபுல் டிஏபி-க்கான மலாய் ஆதரவு அதன் தோழமைக் கட்சிகளான பாஸ் பிகேஆர் ஆகியவற்றின் பலவீனங்களைக் குறிக்கவில்லை என்றார்.

மாறாக மலாய் நலன்களைப் பாதுகாப்பதாக கூறிக் கொள்ளும் அம்னோ மீது மலாய் சமூகம் நம்பிக்கை இழந்து விட்டதையே அது பிரதிபலிக்கிறது என அவர் சொன்னார். அத்துடன் மலாய்க்காரர்கள் டிஏபி போராட்டங்களை நன்கு அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்றார் அவர்.

“அம்னோவை வீழ்த்துவதையே வாக்காளர்கள் விரும்புகின்றனர். அதனால் அவர்கள் டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகிய எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வர்,” என செபெராங் பிராய் நகராட்சி மன்ற உறுப்பினருமான முகமட் சைபுல் சொன்னார்.

TAGS: