நாளை மர்ம நபர் சாட்சியமளிப்பார்

குதப்புணர்ச்சி வழக்கு llல் அன்வார் இப்ராஹிம் பிரதிவாதித் தரப்பு வாதத்தில் நாளை மர்ம நபர் ஒருவர் சாட்சியமளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு தரப்பும் நீதிமன்றமும் கேட்டுக் கொண்ட போதிலும் அந்த நபருடைய அடையாளத்தைத் தெரிவிக்க பிரதிவாதித் தரப்பு மறுத்து விட்டது.

இரசாயனத் துறை தலைமை இயக்குநர் லிம் கொங் பூன் சாட்சியமளித்த பின்னர் அந்த நபர் சாட்சியமளிப்பார் என்று மட்டும் பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர் சங்கர நாயர் கூறினார்.

அந்த சாட்சி alibi சாட்சி அல்ல என்றும் அரசு தரப்புப் பட்டியலில் இல்லை என்றும் நீதிமன்றத்துக்கு வெளியில் சங்கரா தெரிவித்தார். ( alibi சாட்சி என்பவர் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் இடத்தில் இல்லாமல் வேறு ஒர் இடத்தில் இருந்தார் என்பதற்கான சாட்சி ஆவார்)

“அந்த நபருடைய பெயரையோ அல்லது அவர் யார் என்றோ நான் வெளியிட முடியாது. இப்போது முதல் நாளை வரை அவர் நெருக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சமே அதற்குக் காரணம்,” என்றார் அவர்.

“அவர் எங்களுடைய சாட்சி. நாளை அந்த சாட்சி சாட்சியமளிப்பார் என்று மட்டுமே நான் கூற முடியும்.”

விசாரணையின் முந்திய கட்டத்தின் போது கூடுதலாக ஒரு சாட்சி சாட்சியமளிப்பார் என்று  பிரதிவாதித் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2004ம் ஆண்டு அன்வாருடைய முதுகுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்த முதுகெலும்பு சிறப்பு மருத்துவர் டாக்டர் தாமஸ் ஹுக்காண்டும் சாட்சியமளிக்கவிருக்கிறார்.