‘இது சட்டப்பூர்வமான பகற்கொள்ளை. ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. இன்னும் 23 காத்திருக்கின்றன. பக்காத்தான் நல்ல பணி செய்துள்ளது’
‘அம்னோவின் மலிவான நிலத்தில் இப்போது ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதி அமைந்துள்ளது’
குழப்பமில்லாதவன்: இன்னும் பிஎன் -னை நம்புகின்றவர்களுக்கும் ‘உங்களுக்குத் தெரிந்த பிசாசை’நம்புகின்றவர்களுக்கும் என் அறைகூவல் இது தான்: ‘இந்தச் சட்டப்பூர்வமான கொள்ளை குறித்த உங்கள் கருத்து என்ன ?’
அந்த சமூக மண்டபங்களும் பாலர் பள்ளிகளும் எங்கே போயின ?
அடையாளம் இல்லாதவன்_3e93: அம்னோவும் ஊழலும் சதையும் ரத்தமும் போன்று இணை பிரியாதவை. அம்னோ தலைவர், எம்பி-க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அம்னோ தொகுதித் தலைவர்கள் என அது உயர் நிலையில் தொடங்குகின்றது.
இதில் மோசமான விஷயம் என்னவெனில் அவர்கள் சாதாரண அம்னோ உறுப்பினர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போவது தான். அதிகமாகப் போனால் அவர்களுக்கு tupperware பொருட்கள், ‘kain pelekat’, 500 ரிங்கிட் ரொக்கம் கிடைக்கும். அவ்வளவு தான்.
அவர்கள் வெட்கமில்லாமல் விதிவிலக்கு பெற்றவர்களைப் போல நமது நாட்டையும் மக்கள் செல்வத்தையும் கொள்ளையடிக்கும் போது உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்கள் டிவி3லும் ஆர்டிஎம்-மிலும் அன்றாடம் வெளியாகின்ற அவர்களுடைய பிரச்சாரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குடும்பத்தின் வளப்பம் பில்லியன் கணக்கான ரிங்கிட் என்பதை நினைத்துப் பாருங்கள். தவறான வழிகளில் அவர்கள் சேர்த்துள்ள செல்வத்தை என்னால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை.
புதிய மலேசியா: ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் ஒரு சதுர அடி 200 ரிங்கிட் ஆகிறது. இதனை விட சிறந்ததொழில் வேறு ஏதாவது உண்டா ? கெந்திங் சூதாட்ட மய்யமும் நான்கு இலக்க லாட்டரிகளும் கூட தங்களை வளப்படுத்திக் கொள்ளும் பிஎன் அரசியல்வாதிகளுக்கு இணையாக முடியாது.
இது மிக உயர்ந்த நிலையிலான அதிகார அத்துமீறலாகும். நிச்சயம் இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கண்ணை மூடிக் கொள்ளும்.
டேபி: ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்பது ஆத்திரத்தை மூட்டுகின்றது. மசீச-வின் இளம் தொழில் நிபுணர்கள்பிரிவுத் தலைவர் சுவா தீ யோங் இது பற்றி என்ன சொல்கிறார் ?
வெறும் பேச்சு வேண்டாம்: சுவா இது பற்றி உங்கள் கருத்து என்ன ? தலாம் ஊழலைப் போன்று இவை அனைத்தும் 2008ம் ஆண்டு மார்ச் வரையில் அம்னோவும் பிஎன் -னும் சிலாங்கூரை ஆண்ட போது நிகழ்ந்தவை.
சிலாங்கூர் மக்கள் முட்டாள்கள் அல்ல. நீங்கள் குப்பைகளைப் பேசப் பேச அதிகமான வாக்குகள் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்குச் செல்லும்.
ஸ்விபெண்டர்: இது சட்டப்பூர்வமான பகற்கொள்ளை. ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. இன்னும் 23காத்திருக்கின்றன. பக்காத்தான் நல்ல பணி செய்துள்ளது.
மலேசியா ஏபியூ: அம்னோ/பிஎன் கோமாளிகள் கருவூலத்திடமிருந்து எவ்வளவு உறிஞ்சினார்கள், பொது நிதிக்குஎவ்வளவு இழப்பை ஏற்படுத்தினார்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள அந்த நிலங்களைச் சுற்றிலும் ‘Satu lagi projek Barisan Nasional.’ என்ற அடையாளப் பலகைகளை வைக்கலாம் என நான் யோசனை கூறுகின்றேன்.
அபாசிர்: இது நமக்குத் தெரியாமல் மூழ்கியிருக்கும் பெரிய மலையின் ஒரு நுனி தான். நமக்குத் தெரிந்தஅம்னோ ஊழல்கள் மறைக்கப்பட்ட ஊழல்களுடன் ஒப்பிடுகையில் இவை சாதாரணமானவை.
அடையாளம் இல்லாதவன்_3ec6: அம்னோபுத்ராக்கள் நாட்டைக் கொள்ளையடிக்கும் வேளையில்பெரும்பான்மை மலாய்க்காரர்கள் இந்த நாட்டில் நாகரீமாக வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். மலாய்க்காரர்களே விழித்துக் கொள்ளுங்கள். அம்னோ செய்வதை பாருங்கள்.
டூட்: இது தான் அம்னோ/பிஎன் -னுக்குப் புரிந்த தெரிந்த மலேசிய அரசியல் ஆகும். விரைவாகப் பணக்காரராகும் திட்டம்.