அமைச்சர் ராஜா நொங் சிக் : மக்கள் மரபுவழி ஊடகங்களைத்தான் நம்புகிறார்கள்

மக்கள் எந்தச் செய்தியை நம்புவது என்பதை நன்கு தெரிந்தவர்களாக மாறி வருவதால் மாற்றரசுக் கட்சியின் பொய்யுரைகளை அவர்கள் புறந்தள்ளி விடுகிறார்கள் என்கிறார் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின்.

மாற்றரசுக் கட்சிகள் கட்டும் கதைகளில் மக்கள் ஏமாந்து போவதில்லை என்றாரவர்.

“மரபுவழி ஊடகங்கள் சரியான, அதிகாரப்பூர்வமான செய்திகளையே தொடர்ந்து வெளியிட்டு வருவதால் அவற்றின்மீதே மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்”. ஊடகங்களைப் பாராட்டி அமைச்சு நடத்திய நிகழ்வு ஒன்றில் ராஜா நொங் சிக் பேசினார்..

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயனாக விரல்நுனியில் செய்திகளை விரைந்து பெற முடிகிறது என்றாலும் உண்மையையும் பொய்மையையும் வேறுபடுத்திப் பார்க்கும் மக்களின் திறனில் தமக்கு நம்பிக்கை உண்டு என்று அமைச்சர் சொன்னார்.

கூட்டரசுப் பிரதேசம் பற்றி செய்திகளை வெளியிடுவதில் செய்தித்தாள்களும் மின் ஊடகமும் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி தம் அமைச்சு அடுத்த ஆண்டு கூட்டரசுப் பிரதேச சிறப்பு ஊடக விருது ஒன்றை அறிமுகப்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

-பெர்னாமா