சிப்பாங் ஏஇஎஸ் கேமிராக்களைத் ‘திரையிட்டு மூடிவைக்கும்’ பணியை எம்பிஎஸ் செய்யாது

சிப்பாங் முனிசிபல் மன்றம் (எஸ்பிஎஸ்), தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களைத் திரையிட்டு மூடும் பணியைத் தான் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளது. அதைச் செய்யுமாறு குத்தகையாளருக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது.

சிலாங்கூர் அரசு இதற்குமுன் அறிவித்ததுபோல், முனிசிபல் மன்றம் அந்த வேலையைச் செய்யப்போவதில்லை என்பதை எம்பிஎஸ் தலைவர் முகம்மட் சயுத்தி பின் பக்கார் இன்று ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.

“அதற்குப் பதிலாக மன்றம், கேமிராக்களை மூடி வைக்கும்படி ஏஇஎஸ் கேமிராக்களின் குத்தகையாளரான பத்து தெகாப் சென். பெர்ஹாட்டையும் சாலைப்போக்குவரத்துத் துறையையும் பணித்துள்ளது”, என்று அந்த அறிக்கை கூறியது.

TAGS: