நாடற்றவர் மீதான வாக்குறுதி மோசமான அநீதியைச் சரி செய்யும்

பரிதாபமான நிலையில் உள்ள நாடற்ற மக்கள் தொடர்பில் நாம் இப்போது அன்வாருடைய கருணை உள்ளத்தைப் பார்க்கிறோம். அதனை நாம் அம்னோவிடம் காண முடியவில்லை

‘நாடற்றவர்’ பிர்சனையை விரைவாகத் தீர்க்க அன்வார் வாக்குறுதி

பார்வையாளன்: அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டால் நாடற்ற நிலையில் இருக்கும் நூறாயிரக்கணக்கான இந்தியர்கள், கிழக்கு மலேசியர்கள் ஆகியோரை இந்த நாட்டின் குடிமக்களாக மாற்றுவதற்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

அம்னோ இனவாதிகள் மக்களுக்கு இழைத்துள்ள மோசமான அநீதியை அது சரி செய்யும். எல்லா மலேசியர்களுக்கும் அது நல்ல செய்தியுமாகும்.

ஏனெனில் குடிமக்களாகி விட்டால் அவர்கள் வேலை செய்ய முடியும். பள்ளிக்கூடங்களுக்குப் போக முடியும். அதனால் அவர்கள் பயனுள்ள குடிமக்களாகி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவர்.

நாடற்ற நிலை காரணமாக அவர்கள் வேலை செய்யவும் முடியவில்லை. கல்வி கற்கவும் முடியவில்லை. அதன் விளைவாக அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மலேசியாவில் விகிதாச்சார  அடிப்படையில்  அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் கிரிமினல்களாக இருப்பதற்கு  அதுவே காரணம்.

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்து தனது வாக்குறுதியை அது காப்பாற்றினால் குற்றச் செயல்களும் பெருமளவு குறைவதைக் காணலாம். அதனை அனைத்து மலேசியர்களும் வரவேற்பது திண்ணம்.

அதற்கு பின்னர் நாட்டின் தோற்றம் மேம்பாடு காணும். அந்நிய முதலீடுகளுக்கும் கவர்ச்சிகரமான இடமாக மலேசியா திகழும்.

மூன்றாவது கண்: அந்தப் பிரச்னையைக் கடந்த 55 ஆண்டுகளாக பிஎன் தீர்க்கவில்லை. ஆனால் அது சட்ட  விரோதக் குடியேற்றக்காரர்களுக்கு வெகு வேகமாக குடியுரிமையைக் கொடுக்கின்றது.

அந்தப் பிரச்னையை ஒரு மாதத்தில் தீர்ப்பதாக பக்காத்தான் துணிச்சலுடன் சொல்கிறது. பிஎன் பயனற்றது, ஒன்றுக்கும் உதவாதது, திறமையில்லாதது, மக்களுக்குச் சுமையானது என்பதையே அது காட்டுகின்றது.

மஹாஷித்லா: பரிதாபமான நிலையில் உள்ள நாடற்ற மக்கள்- (பெரும்பாலானவர்கள் இந்தியர்கள், அவர்கள் இந்த நாட்டில் பிறந்து வாழ்நாள் முழுவதும் இங்கே வாழ்கின்றவர்கள்) – தொடர்பில் நாம் இப்போது அன்வாருடைய கருணை உள்ளத்தைப் பார்க்கிறோம். அதனை நாம் அம்னோவிடம் காண முடியவில்லை

ஆர்ஏ1: மலேசியாவில் 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த எண்ணிக்கை இந்த நாட்டில் வாழும்  1,743,922 தமிழர்களில் 17 விழுக்காடு ஆகும். ஐந்து தமிழர்களில் ஒருவர் நாடற்றவராக இருப்பதையே அது உணர்த்துகின்றது.

ரைட்தான்: வயது முதிர்ந்த மெலிவான ஆண்களும் பெண்களும் பலப்பல ஆண்டுகள் காத்திருந்த பின்னர் தங்கள் மை கார்டுகளைப் பெறுவதை நாம் இப்போது காண்கிறோம். மை கார்டுகள் வழங்கப்படும் செய்தியை பெரிய படத்துடன் நமது நாளேடுகள் வெளியிடுகின்றன. அவற்றை வழங்கும் அமைச்சர்கள்/ மசீச அதிகாரிகள் பெரிய சாதனை செய்து விட்ட மகிழ்ச்சியோடு அதில் காணப்படுகின்றனர்.

உங்கள் அடிச்சுவட்டில்: சக மலேசியர்களே, இந்த நாட்டில் ஹிண்ட்ராப் மிக  முக்கியமான அமைப்பு என்பதால் நான் இந்த விஷயத்தில் கருத்துரைக்க விரும்பவில்லை. இந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை ஹிண்ட்ராப்புக்கு மட்டுமே போய் சேர வேண்டும். மற்ற யாருக்கும் அல்ல.

ஹிண்டராப் இல்லாவிட்டால் மலேசியர்கள் இன்னும் பார்வையற்றவர்களாகவும் கோமாளிகளாகவும் மட்டுமே இருப்பார்கள். ஹிண்ட்ராப் இல்லை என்றால் மலேசியர்கள் இன்னும் சுரண்டப்படுவர்.