நிழல் வரவு செலவுத் திட்டம் வாழ்க்கை செலவின உயர்வைக் கட்டுப்படுத்தும்

பக்காத்தான் ராக்யாட் இன்று தனது மாற்று வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துவிட்டதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைப்பது மீது அது கவனம் செலுத்துகிறது.

“அந்த வரவு செலவுத் திட்டத்தை திட்டமிடும் போது மக்கள் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து எல்லாவற்றுக்கும் மேலாக அதைக் கருதுவது என்னும் கோட்பாடு வழிகாட்டியாகப் பின்பற்றப்பட்டது,” என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பக்காத்தான் தயாரித்துள்ள மாற்று வரவு செலவுத் திட்டத்தின் விரிவான அம்சங்களை நிருபர்களுக்கு விளக்கினார்.

அந்த ‘மாற்று வரவு செலவுத் திட்டத்தின்’ விவரங்கள் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியிடப்படும்.

அதிகமான வாழ்க்கை செலவுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் குறைக்க அது முன்மொழிந்துள்ள நடவடிக்கைகள் வருமாறு:

.பொதுவான 1,100 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பளம்
.மூத்த குடி மக்களுக்கு ஆண்டுதோறும் 1,000 ரிங்கிட் போனஸ்
.குடும்ப மாதர்களுக்கு ஆண்டுதோறும் 1,000 ரிங்கிட் போனஸ்
.குறைந்த வருமானம் பெறுவோருக்கு “கூடுதல்” அலவன்ஸாக மாதம் ஒன்றுக்கு 550 ரிங்கிட்
.சமூக நல உதவியை 300 ரிங்கிட்டிலிருந்து 550 ரிங்கிட்டாக அதிகரிப்பது

அந்த மாற்று வரவு செலவுத் திட்டம் மீது நாளை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டிடத்தில் விளக்கம் கூட்டம் நடைபெறும். அத்துடன் அதற்குப் பின்னர் அந்தத் திட்டத்தை வரைவதற்கு பொறுப்பான குழு உறுப்பினர்களும் பக்காத்தான் வல்லுநர்களும் ஷா அலாமில் விளக்கம் அளிப்பர்.