மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்க வந்தவர்களாம் இந்தியர்கள்!

மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்குவதற்கும் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்திய சீன வந்தேறிகளை பிரிட்டிஷ்காரர்கள் இங்கு அழைத்து வந்தனர் என்று கமார்ஸன் முஸ்தாபா என்பவன் தன்னுடைய முகநூல் (Facebook) எழுதியிருக்கிறான்.

சீனர்களைப் பொறுத்தவரை சுரங்கங்களில் வேலை பார்ப்பதற்கும் பிரிட்டிஷ் கூலிகளாக இருப்பதற்கும் தருவிக்கப்பட்டனர் என்றும் அவன் குறிப்பிட்டுள்ளான்.

“மலாய்க்காரர்கள் சுதந்திரம் கேட்டபோது, இந்தியர்களும் சீனர்களும் மலாய்க்காரர்களின் கூலிகளாக தொடர்ந்து நிலைநிறுத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ்காரர்கள் நிபந்தனை விதித்தனர்.”

மலாய்க்காரர்களும் பரிதாபப்பட்டு இந்தியர்களை நண்பர்களாக்கி கொண்டனர். ஆனால், வழக்கம்போல் வந்தேறிகள் கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்ததும் தங்களையே மறந்து விடுகின்றனர். எஜமானர்களையே எதிர்க்கின்றனர் என்று கமார்ஸமான் முஸ்தாபா எழுதியிருக்கிறான்.

மற்ற நாடுகளில் நிலை வேறு. இதனால்தான் இந்தியர்களும் சீனர்களும் எந்த நாட்டிற்கும் சென்றாலும் அங்குள்ளவர்களுக்கும் இவர்களைப் பிடிப்பது இல்லை.

இவர்களுக்கும் சொந்த நாடு உண்டு. இவர்களுடையது ஏழை நாடுகள் என்பதால் இவர்கள் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. மற்றவர்களின் நாடுகளில் வாழும்போது குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். தலைக்கணம் பிடித்தவர்களாக உள்ளனர்.

இந்தியாகளே, சீனர்களே நினைத்துப் பாருங்கள். நீங்கள் எல்லாம் வந்தேறிகள். பிரஜாவுரிமை கொடுத்தப் பின்னர் அரசாங்கத்தை எதிர்க்காதீர்கள் என்று அவன் தனது முகநூலில் எழுதியிருக்கிறான் மார்ஸன் முஸ்தாபா.

தான் எங்கிருந்து எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவன் என்ற வரலாற்றை மறந்துவிட்டு, கமார்ஸன் முஸ்தாபா என்கிற ‘கம்பத்து மீன்’ துள்ளிக் குதித்து இனங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியுள்ளது.

இந் நாட்டை வளப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உன்னைப்போல் கூலிக்கு மாரடிக்கும் கம்பத்து மீன்களையும் வாழ வைக்க தங்களையே அர்ப்பணித்தவர்கள் நீ சொல்லும் வந்தேறிகள் என்பதை நீ அறிவாயா?

இந்நாட்டில் காலடி எடுத்து வைத்தவர்களில் நாட்டை கைப்பற்ற வேண்டும், அரசியல் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இங்கு வாணிகத்துறையை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சி, சமயம், கலை, கலாட்சாரம் ஆகியவற்றோடு அன்றைய மக்களின் மொழி வளர்ச்சிக்கும் அதன் மேம்பாட்டிற்கும் பல்லாயிரக்கணக்கான சொற்களை வழங்கியவர்கள் கிபி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இந்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இந்தியர்கள் என்பதை நீ அறிவாயா?

இந்நாட்டிற்காக அன்றைய இந்தியர்கள் உழைப்பையும் உயிரையும் மட்டும் தரவில்லை. பலரின் முதலீடுகளுக்கு பணமும் தந்துள்ளனர். செட்டியார்களிடம் கடன் வாங்காத இனமே இந்த நாட்டில் இருந்ததில்லை, அரண்மனையைச் சேர்ந்தவர்களும் உட்பட என்பதை நீ அறிவாயா?

யாரைச் சொல்கிறார் மலாய்க்காரர்களின் மலத் தொட்டியை தூக்க வந்தவர்கள் என்று……?

மல்லாக்கப்படுத்துக் கொண்டு காறி துப்பினால் தன் மேலேதான் விழும் என்பதை மறந்து பேசுகிறது மார்ஸன் முஸ்தாபா என்கிற அறிவுகெட்ட முண்டம்!

TAGS: