“படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” முதல் “படியாக்கம் செய்யப்பட்ட அம்னோ உறுப்பினர்கள்” வரை

தனிநபர்கள் இரண்டு அடையாளக் கார்டுகளை வைத்துள்ள பிரச்னை, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலுடன் நிற்கவில்லை எனத் தோன்றுகிறது.

“படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” பலர் இரண்டு அடையாளக் கார்டுகளை மட்டும் வைத்திருக்கவில்லை. இரண்டு அம்னோ உறுப்பியங்களையும் வைத்திருப்பதற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனால் ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அந்த 65 வயதுக் கட்சியின் சட்டப்பூர்வ நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அம்னோ உறுப்பியத்தை வைத்துள்ள மூன்று “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” பற்றிய தகவலை கடந்த வாரம் ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான் கையாட் அம்பலப்படுத்தினார். தேர்தல் ஆணையம், தேசியப் பதிவுத் துறை, அம்னோ உறுப்பிய புள்ளி விவரக் களஞ்சியம் ஆகியவற்றின் இணையத் தளங்களை சோதனை செய்த போது பல அம்னோ உறுப்பினர்களுக்கு அந்தக் கட்சிக்குள்ளேயே ‘படியாக்கம் செய்யப்பட்டவர்கள்” இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் இன்று கூறியிருக்கிறார்.

பொது மக்கள் தங்களுடைய அடையாளப் பத்திரங்களைச் சோதித்துக் கொள்வதற்கு உதவும் தேசியப் பதிவுத் துறை இணையத் தளத்திற்கு மலேசியாகினி சென்ற போது மை கார்டுகளை வைத்திருக்கும் மூவருக்கும் ‘கூடுதலாக’ இன்னொரு மைகார்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த மை கார்டுகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு- அவர்களுடைய எண்ணில் கடைசி இரண்டு இலக்கங்கள் மாறுபட்டிருப்பதாகும்.

மூன்று ‘படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்/ அம்னோ உறுப்பினர்கள் எனக் கூறப்படுகின்றவர் விவரங்கள்: 

1. Azhar bin Ahmad

FiNONErst MyKad: 680713095049 (valid)
Locality: Batu 13
Polling district: Tasoh
State seat: Beseri
Parliamentary seat: Padang Besar

Umno membership No: 00412036
State: Perlis
Division: Padang Besar
State seat: Beseri
Branch: Batu Hampar Beseri

Second MyKad: 680713095057 (valid)
Locality: Kg Baru Chuping
Polling district: Sg Buloh
State seat: Chuping
Parliamentary seat: Padang Besar

Umno membership No: 01167397
State: Perlis
Division: Padang Besar
State seat: Chuping
Branch: Kampong Baru Sungai Serai

2. Besah binti Mat

First MyKNONEad: 450713095002 (valid)
Locality: Telaga Haji Abd Latiff
Polling district: Changkat Jawi
State seat: Guar Sanji
Parliamentary seat: Arau

Umno membership No: 00405301
State: Perlis
Division: Arau
State seat: Guar Sanji
Branch: Telaga Hj Latiff

Second MyKad: 450713095010 (valid)
Locality: Jejawi Batas
Polling district: Alor Lanchang
State seat: Sena
Parliamentary seat: Kangar

Umno membership No: 00401132
State: Perlis
Division: Kangar
State seat: Sena
Branch: Jejawi

3. Mansor bin Ahmad

First MNONEyKad: 481104025705 (valid)
Locality: Felda Bkt Tangga
Polling district: Felda Bkt Tangga
State seat: Bukit Kayu Hitam
Parliamentary seat: Kubang Pasu

Umno membership No: 00145824
State: Kedah
Division: Kubang Pasu
State seat: Bukit Kayu Hitam
Branch: Felda Bukit Tangga

Second MyKad: 481104025713 (valid)
Locality: Kampong Masjid
Polling district: Felda Batu Lapan
State seat: Bukit Kayu Hitam
Parliamentary seat: Kubang Pasu

Umno membership no: 00144136
State: Kedah
Division: Kubang Pasu
State seat: Bukit Kayu Hitam
Branch: Pekan Changlun

தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் உள்ள சரி பார்க்கும் முறை இன்று காலை தொடக்கம் வேலை செய்யாததால் வாக்களிப்பதற்கு அந்த மூவருக்கும் உள்ள தகுதி பற்றி மலேசியாகினி உறுதி செய்ய முடியவில்லை.

இணையத் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இப்போது அது சரி செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்பு கொள்ளப்பட்ட போது தேர்தல் ஆணைய பொது உறவு அதிகாரி கூறினார்.

அம்னோ செயலகத்தின் பதிலைப் பெறுவதற்கு மலேசியாகினி இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.