சந்திர மோகனும் சைட் உசேனும் செனட்டர்களானார்கள்

Chandra Mohan and Syed Husinதொழிலாளர்களின் நலனுக்குப் போராடும் சமூக ஆர்வலர் சந்திரமோகனும் பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் சைட் அலி உசேனும் இன்று செனட்டர்களாக பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சந்திரமோகன், 59, டிஏபி சுங்கை சுவா கிளைத் தலைவர் என்பதுடன் டிஏபி உலு லங்காட் தொகுதியின் துணைத் தலைவருமாவார். அவர் செனட்டர் ஆவது இதுவே முதல்முறை.

அவர் 2008-லிருந்து காஜாங் முனிசிபல் மன்ற உறுப்பினர்களில் ஒருவருமாகவும் இருந்து வருகிறார்.

சைட் உசேன் ஏற்கனவே செனட்டராக இருந்தவர். அவருடைய தவணைக் காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  அவர், மேலும் ஒரு தவணைக்கு மறு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

1990- இலிருந்து 2001 வரை, பார்டி ரக்யாட் மலேசியா (பிஆர்எம்) தலைவராக இருந்தவர் சைட் உசேன், 76. அவர் இதுவரை 20 நூல்களை வெளியிட்டிருக்கிறார்.  ‘Pimpinan Masyarakat Kampung’, ‘Masa Depan Orang Melayu’, ‘Kemiskinan dan Kelaparan Tanah di Kelantan’,’Dua Wajah’ போன்றவை அவற்றில் சில.

-பெர்னாமா