ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரத்தில் எம்ஏசிசி நுழைகிறது

asliகிளந்தான் பிஹாய் தேசியப் பள்ளியில் அக்டோபர் 23ம் தேதி நண்பகல் உணவுக்கு முன்னர் துவா சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட நான்கு மாணவிகளுடைய பெற்றோர்கள் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மாணவிகள் கன்னத்தில் அறையப்பட்டது தொடர்பில் செய்யப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு அந்தப் பெற்றோர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் வசிக்கும் போஸ் பிஹாய் ஒராங் அஸ்லி கிராமத்துக்கு கடந்த செவ்வாய்க் கிழமை எம்ஏசிசி -யைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சென்றனர்.

“நாங்கள் லஞ்சம் கேட்டோமா அல்லது பள்ளிக்கூடம் லஞ்சம் கொடுக்க முன் வந்ததா என அவர்கள் அறிய விரும்பினர்.”

“நாங்கள் லஞ்சம் கேட்ட விஷயமே எதுவும் இல்லை என நாங்கள் அவர்களிடம் சொன்னோம். அந்த அதிகாரிகள் மனநிறைவு அடைந்தனர். ”

கிளந்தானில் குவா மூசாங்கிற்கு அருகில் போஸ் பிஹாய் நிர்வாக மய்யத்துக்குள் அந்தப் பள்ளிக்கூடம் அமைந்துள்ள கம்போங் தென்ரிக்கில் கிராமப் பேராளர் அரோம் அசிர் அந்த விவரங்களை வெளியிட்டார்.asli1

அரோம், பிஹாய் தேசியப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவரும் ஆவார். சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் தந்தையர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட போது அவரும் உடனிருந்தார்.

லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றிப் போலீசில் புகார் செய்வதற்காக 34 வயதான ஹசாம் அச்சோய், 38 வயதான அத்தார் பெடிக், 49 வயதான அலோங் பண்டாக் ஆகிய அந்த மூன்று தந்தையரும் இந்த மாதத் தொடக்கத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள தங்கள் கிராமத்திலிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் சென்றனர்

ஒவ்வொரு பெற்றோருக்கும் 300 ரிங்கிட் கொடுக்க முன் வந்தனர்

துவா சொல்லாததற்காக தங்கள் புதல்விகளைக் கன்னத்தில் அறைந்த ஆசிரியருக்கு எதிரான போலீஸ் புகாரைமீட்டுக் கொள்வதற்கு நவம்பர் 7ம் தேதி அந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு ஒவ்வொருவருக்கும் 300 ரிங்கிட் கொடுக்க முன் வந்ததாக மூன்று தந்தையர்களும் கூறிக் கொண்டனர்.

லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகக் கூறப்படுவது மீது என்ன செய்வது என எங்களுக்கு முதலில் தமக்கும் மற்ற பெற்றோர்களுக்கு புரியவில்லை என அத்தார் சொன்னார்.

“அவர்கள் எங்களுக்கு 300 ரிங்கிட் கொடுக்க முன் வந்தனர் எங்கள் போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்பினர். ஆனால் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. என்ன செய்வது என்பது மீது நாங்கள் பாக் ரோமை (அது அரோமைக் குறிக்கிறது) கேட்க விரும்பினோம்,” என அத்தார் சொன்னர்

“நான் கிராமத்துக்குத் திரும்பியதும் பணம் கொடுக்க முன் வந்த விஷயத்தை அறிந்து கொண்டேன். அது தவறு என அவர்களிடம் சொன்னேன். ஆகவே நாங்கள் போலீசில் இன்னொரு புகார் கொடுத்தோம்,” என்றார் அரோம்.

மாணவர்களுடைய பெற்றோர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த எம்ஏசிசி அதிகாரிகள் போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ள வேண்டாம் என அறிவுரை சொன்னதாகவும் அவர் மேலும் கூறினார்.

அத்தாரின் 13, 14 வயது புதல்விகள் இருவர், ஹசானின் 12 வயது புதல்வி, அலோங்கின் 14 வயது புதல்வி ஆகியோர் பிஹாய் தேசியப் பள்ளியில் ஆறாம் ஆண்டு மாணவிகள் ஆவர்.