இந்தோனேசியப் பணிப்பெண்களுக்கான செலவுத் தொகை கூடுகிறது

1maidஇந்தோனேசிய பணிப்பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்ள 2011-இல் மலேசிய இந்தோனேசிய அரசாங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதைவிட கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை வேலைக்கு வைத்துக்கொள்வோருக்கும் பணிப்பெண்களுக்கும் ஆகும் செலவை மட்டுமே உள்ளடக்கியது என்றும் அதை அமல்படுத்த இயலாது என்றும் மலேசிய வேலைவாய்ப்பு முகவர்களின் தேசிய சங்க (பிகாப்)த் தலைவர் ராஜா சுல்கிப்ளி டஹலான் கூறினார்.

“முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை ரிம4511. இது ஒரு இந்தோனேசிய பணிப்பெண்ணை வேலைக்குச் சேர்த்துக்கொள்வதற்கு ஆகும் செலவுத்தொகை

“இதில் இங்குள்ள முகவர் நிறுவனங்களும் அங்குள்ளவர்களும் செய்யும் செலவுகள் சேர்க்கப்படவில்லை”.

1maid1இன்று கோலாலும்பூரில், அசோசியாசி பெருசஹான் ஜாசா தெனாகா இந்தோனேசியா (அப்ஜாடி)வும் மலேசிய அந்நிய பணிப்பெண் முகவர் சங்கமும்(பாபா) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களீடம் பேசினார்.

முந்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாட்டால் அதை அமல்படுத்த முடியாமல் மீண்டும் பரிசீலிக்க வேண்டியதாயிற்று என்றாரவர்.

“கூடுதல் தொகை பற்றி முடிவு செய்யுமுன்னர் மறுபடி மறுபடி நான்கு தடவை அதை மறுபரிசீலனை செய்யுமாறு மனிதவள அமைச்சு எங்களைக் கேட்டுக்கொண்டது”, என்று கூறிய ராஜா சுல்கிப்ளி புதிதாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் தொகை பொருத்தமானதும் நியாயமானதுமாகும் என்றார்.

புதிய தொகையை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் சொன்னார்.