ஏஇஎஸ் சம்மன்களை அரசாங்கம் மீட்டுக்கொள்கிறதா?

1aesநேற்று தொடக்கம் குறைந்தது இரண்டு நீதிமன்றங்களில் போக்குவரத்து குற்றங்கள் மீதான வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கையில்,  தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்)-இன்கீழ் வெளியிடப்பட்ட போக்குவரத்து சம்மன்கள் பெருமளவில் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று என்று எண்ணத் தோன்றுகிறது.

“நேற்றிலிருந்து இப்படி நடக்கிறது. ஆனால், நேற்றைய வழக்குகளுக்கு எங்கள் வழக்குரைஞர்களால் செல்ல இயலவில்லை.

“ஆனால், இன்று காலை கோலாலம்பூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு சம்மன்களுடன் வந்தவர்களிடம் அந்த  சம்மன்களை வாங்கிக்கொண்டு ஜேபிஜே அதிகாரிகள் அவர்களை வீட்டுக்குப் போகச் சொன்னார்கள் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

“அவர்கள்மீது வழக்கு விசாரணை நடக்கவில்லை”,என்று அஞ்சல்வழி சம்மன்களை-எதிர்க்கும் குழுவான கேஸின் சட்ட ஆலோசகர் சுல்ஹாஸ்மி ஷரீப் கூறினார்.

இன்று தாம் முன்னிலை ஆகவிருந்த இரண்டு வழக்குகளும் நாளையும் வெள்ளிக்கிழமையும் விசாரிக்கப்படவிருந்த மேலும்  எட்டு வழக்குகளும் அரசுதரப்பு வழக்குரைஞர்களால் ஒரு மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

1aes1அது பற்றி அவர்களிடம் விசாரித்தபோது “தொழில்நுட்பப் பிரச்னைகள்” என்றார்களே தவிர வேறு எதுவும் சொல்ல மறுத்தார்கள் என சுல்ஹாஸ்மி (வலம்) தெரிவித்தார்.

புத்ரா ஜெயா நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த ஏஇஎஸ் வழக்குகள் விசயத்திலும் இதேபோல்தான் நடந்துள்ளது என அங்கு வழக்குக்காக நீதிமன்றம் சென்ற ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக சுல்ஹஸ்மி கூறினார். ஏஇஎஸ் சம்மன்களுடன் வந்திருந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னர்  குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமலேயே அவர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றாரவர்.

TAGS: