அந்த முன்னாள் உயர்நிலை போலீஸ்காரருக்கு எப்படி நான்கு குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகள் சொந்தமானது ?

PDRMமுன்னாள் உயர்நிலை போலீஸ் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் மாநகர மத்தியில் உள்ள மிஹார்ஜாவில் குறைந்தது நான்கு குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளை வாங்க முடிந்தது என்பதை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)விளக்கம் வேண்டும் என பிகேஆர் இன்று கோரியுள்ளது.

டிபிகேஎல் சொத்துச் சோதனை மூலம் அந்தத் தகவல் தமக்குக் கிடைத்ததாக அந்தக் கட்சியின் பயனீட்டாளர் விவகாரப் பிரிவுத் தலைவர் யாஹ்யா சாஹ்ரி கூறினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒய்வு பெற்றதாக நம்பப்படும் அந்த அதிகாரியின் பெயரை வெளியிட யாஹ்யா மறுத்து விட்டார். அவர் ஒய்வு பெற்றதும் அந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த அடுக்கு மாடி வீடுகள் முன்னாள் அதிகாரிக்கு இன்னும் சொந்தமாக உள்ளன என்றார் அவர்.

அந்த அடுக்கு மாடி வீடுகள் முன்னாள் அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமானவை.”

அத்தகைய வீடுகளை அதுவும் குறிப்பாக நகர மத்தியில் பெறுவதற்கு தகுதியுள்ள மக்கள் வரிசையாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதர பல சொத்துக்களையும் வைத்துள்ள அந்த உயர் நிலை போலீஸ் அதிகாரி எப்படி அந்த குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளையும் பெற முடிந்தது,” என அவர் வினவினார்.

அந்த சொத்துச் சோதனை விவரங்கள் அடங்கிய பிரதிகள் இன்று ஊடகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

கோலாலம்பூரில் அந்த முன்னாள் அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் 10 சொத்துக்கள் இருப்பதாகவும் யாஹ்யா சொன்னார்.pdrm1

பல ஆண்டுகளாக சோதனை நடத்தியும் ஏன் இப்போது அந்த விஷயத்தை அம்பலப்படுத்துகின்றீர்கள் என யாஹ்யாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இதற்கு முன்னர் இதை விடக் கடுமையான விஷயங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டியிருந்ததாக தெரிவித்தார்.

அந்த முன்னாள் அதிகாரிக்கு கோலாலம்பூருக்கு வெளியிலும் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் அவை பற்றி அடுத்தடுத்த நிருபர்கள் கூட்டத்தில் வெளியிடுவதாகச் சொன்னார்.

போலீஸ் படைக்கு அப்பால் பல உயர்நிலை அதிகாரிகளும் குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பதற்கான ஆதாரமும் தம்மிடம் இருப்பதாகவும் யாஹ்யா கூறிக் கொண்டார்.