பெகிரின் முன்னாள் மனைவி குழந்தை பராமரிப்புக்கு ரிம121மில்லியன் கேட்டு வழக்கு

1shanazஷானாஸ் ஏ.மஜிட், தம் முன்னாள் கணவரும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூடின் மகனுமான முகம்மட் அபு பெகிர் தாயிப்மீது ரிம121 மில்லியன் கேட்டு மேலும் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.

அவ்வழக்கு கோலாலும்பூர் ஷாரியா உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 10-இல் விசாரணைக்கு வருகிறது.

1shanaz1நவம்பர் 30-இல் கோலாலும்பூர் ஷாரியா உயர் நீதிமன்றத்தில்  பதிவு செய்த மனுவில் மணவிலக்கு ஏற்பட்டதிலிருந்து முகம்மட் அபு பெகிர் 18வயதான தங்கள் மகனின் பராமரிப்புக்குப் பணம் கொடுக்கவில்லை என்று ஷானாஸ் கூறியுள்ளார். 

அவர்கள் 1992 ஜனவரியில் மணம் செய்துகொண்டனர். கடந்த ஆண்டு மே 11-இல் அவர்களுக்கிடையில் மணவிலக்கு ஏற்பட்டது.

1bekrஷானாஸ்,49, தம் மனுவில் இப்போது வெளிநாட்டில் கல்விபயிலும் தம் மகனுக்கு மஹ்மூட் அபு பெகிர் (வலம்) பராமரிப்புப் பணம் எதுவும் இதுவரை கொடுத்ததில்லை என்றார்.

பராமரிப்புப் பணம் கொடுக்கும் வசதி மஹ்மூட் அபு பெகிருக்கு உண்டு என்றாரவர்.

அவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.அவர் 115 நிறுவனங்களில் இயக்குனராகவுள்ளார். 50 மேற்பட்ட நிறுவனங்களில் பங்கு வைத்திருக்கிறார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவர்களுக்கு மணவிலக்கு வழங்கியபோது பிள்ளைக்கான பராமரிப்புச் செலவு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஷயாரியா சட்டப்படி இன்னும் மாணவனாகவே உள்ள மகனுக்கான பராமரிப்புச் செலவுகளைக் கொடுக்கும் பொறுப்பு தந்தையுடையதாகும் என்றாரவர்.

இது தவிர, முகம்மட் அபு பெகிரின் சொத்தில் தமக்குரிய பங்காக ரிம400 மில்லியன் கேட்டு ஷானாஸ் கடந்த ஆண்டில் தொடர்ந்த ஒரு வழக்கும் விசாரணையில் உள்ளது. டிசம்பர் 24-இல் அதன்மீதான விசாரணை தொடரும்.
 
ஷானாஸ். பிரபல பாடகி ஷீலா மஜிட்டின் தமக்கையாவார்.