அரசாங்கத்துக்கு எதிராக மனக்குறை கொண்டிருப்பவர்கள், ஜனவரி 12 நாள் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணி (Himpunan Kebangkitan Rakyat)க்குத் திரண்டுவர வேண்டும் என்று பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“இதை (பேரணி), மாற்றத்தை உண்டுபண்ண நினைக்கும் டிஏபி, பாஸ், பிகேஆர், பார்டி சோசலிஸ் மலேசியா, முதலிய அரசியல் கட்சிகளும் என்ஜிஓ-களும், என்ஜிஓ-களில் சேராதவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
“யாருக்கெல்லாம் அரசாங்கத்தின்மீது ஆத்திரம் இருக்க்கிறதோ, அவர்கள் தங்கள் ஆத்திரத்தை ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் வெளிப்படுத்த இதில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்”, என்று மாட் சாபு என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அந்த இஸ்லாமியக் கட்சித் தலைவர் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
பேரணியை ஜனவரி 12-இல் பிற்பகல் மணி 2 தொடங்கி மாலை 5 வரை மெர்டேகா அரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.