வரி கட்டாத மலிவான பிஎன் நிலத்தை சிலாங்கூர் பறிமுதல் செய்ய வேண்டும்

umno“அந்த நிலத்தை ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலைக்கு அவர்கள் பெற்றார்கள். இருந்தும் அவர்களுக்கு நில வரியை கொடுக்க மனமில்லை. பிசாசுகள் மட்டுமே அப்படிச் செய்யும்”

மலிவாக பெற்ற நிலத்துக்கு சிலாங்கூர் அம்னோ வரி கொடுக்கவில்லை

அடையாளம் இல்லாதவன்#007: அதிகாரத்தில் இருந்த போது நிலத்தையும் சொத்துக்களை வாங்குவதும்வர்த்தகத்தை நடத்துவதும் வினோதமாக இல்லையா ?

வர்த்தகத்தை நடத்த அந்தக் கட்சிக்கு அனுமதி உள்ளதா ? அப்படி இல்லை என்றால் அந்த கட்சியை நிறுத்தி வைத்து அதன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வதற்கு அந்தக் காரணம் மட்டும் போதும்.

அந்தக் கட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மீது விசாரணையைத் தொடங்குவதற்கும் போதுமானது.அந்த நிலத்தை அது மலிவாக வாங்கியது, அதற்கு நில வரி செலுத்துவதில்லை போன்ற விஷயங்கள் பற்றிக் கூட கவலைப்பட வேண்டாம்.

கட்சி நிர்வாக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதற்காக நிலம் அல்லது சொத்துக்கள் வாங்கப்பட்டிருந்தால் அவை சந்தை விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வெறுப்படைந்தவன்: அவர்கள் நிலத்தை மலிவாக வாங்கினார்கள். அத்துடன் நிற்கவில்லை அவர்கள். அந்தநிலத்தின் மீதான வரிகளையும் கொடுப்பதில்லை. ஆனால் மக்கள் எல்லா வரிகளையும் செலுத்துகின்றனர். அப்படி  செலுத்தா விட்டால் அவர்கள் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு விடும்.

சஹானா: அந்த நிலத்தை ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலைக்கு அவர்கள் பெற்றார்கள். இருந்தும் அவர்களுக்கு நில வரியை கொடுக்க மனமில்லை. பிசாசுகள் மட்டுமே அப்படிச் செய்யும்.

அது அம்னோ ஏமாற்று வேலை என்பதால் சிலாங்கூர் அரசாங்கம் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் நிலத்தைக் கைப்பற்ற வேண்டும்.

அம்னோக்காரர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இது போன்ற அபத்தங்கள் நிகழ்வதைக் காண நாங்கள் விரும்பவில்லை.

இந்த அழகான, முன்னேற்றகரமான நாட்டை நீங்கள் உண்மையில் நேசித்தால் 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களியுங்கள். அம்னோ/பிஎன் -னை புதைத்து விடுவோம்.

நாடோடி: மிக நல்ல யோசனை. சுபாங் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் ஹென்னா இயோ அவர்களே, நீங்கள்சொல்வது சரி. அந்த அம்னோ ‘கொள்ளையர்கள்’ அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை மீட்பதற்கு நிலத்தை பறிமுதல் செய்வது தான் ஒரே வழி.

எஸ்கியாட்: எப்படியாவது சிலாங்கூரை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கைப்பற்றுவதற்கு அவர்கள் காத்திருக்கவேண்டும். அது நடந்தால் தொடர்ந்து இலவசமாக அவர்கள் குடியிருக்க முடியும்

ஐவாட்ச்: இந்த நாடு ஆப்பிரிக்கால் உள்ள மூன்றாம் உலக நாடுகளைப் போல மாறி விட்டது. அம்னோ  ஜமீன்தார்கள் இந்த நாட்டின் செல்வத்தை தங்கள் தாத்தாக்கள் சொத்துக்கள் என எண்ணி நடந்து கொள்கின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளாக அவர்கள் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்காமல் பட்டப்பகலில் கொள்ளையடிக்கின்றனர். இது போதும், போதும். அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்ற வேண்டும்.

அடையாளம் இல்லாதவன் #24936590: இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு நஜிப் செவி சாய்க்க முடியாத,  நிரந்தமாகக் காது கேளாதவர் என்பது ஹன்னா இயோவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

 

TAGS: