கடந்த மாதம் நடைபெற்ற பெர்சே 2.0 பேரணியில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் ரிம50 கொடுக்கப்பட்டது என்ற அம்னோ அமைச்சரின் கூற்றை பாஸ் எள்ளிநகையாடியது.
அம்னோ அமைச்சர் ரயிஸ் யாத்திம் வெளியிட்ட அந்த அறிக்கை மேலோட்டமானது என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் இன்று கோலாலம்பூரில் கூறினார்.
“அவர்களுடையத் தலைவர்களின் கூட்டத்திற்கு ஒரு பெருங்கூட்டத்தை கூட்டுவதற்கு போக்குவரத்து, பணம் மற்றும் உணவு ஆகியவை கொடுக்க வேண்டும். அவர்களுடைய அத்தகையச் செயலுடன் நம்மை சமப்படுத்துகின்றனர். அவர்களால் “அம்னோ வட்டத்திற்கு” வெளியில் சிந்திக்க முடியாது.”
“அவர் (ரயிஸ்) ‘அம்னோ வட்டத்துக்குள்’ சிந்திக்கிறார்… பெர்சேயில் பலர் பங்கேற்றனர் ஏனென்றால் பணம் என்று அவர் கூறினார். அம்னோ (கூட்டத்தில்) ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் பணம்.
“லண்டன் கலகக்காரர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டது என்று ரயிஸ் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”, என்று மாபுஸ் விகடமாகக் கூறினார்.