உங்கள் கருத்து: நஜிப் அவர்களே, பிஎன் குண்டர்களை நீங்கள் கட்டுப்படுத்துவது நல்லது

anak“கௌரவமான மனிதர் நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவார். காரணம் அவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நேர்மையற்ற மனிதர் உண்மையை மறைக்க எல்லா வழிகளையும் பின்பற்றுவார்.”

பிஎன் ஆதரவு கும்பல் அனாக்-கின் ஆரஞ்சு வாகன அணியைத் தாக்கியது

உங்கள் அடிச்சுவட்டில்: இந்த நாட்டுக்கு என்ன நேர்ந்தது ? சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக குடிமக்கள் சுதந்திரமாகக் கூட நடமாட முடியவில்லையே ?

அனாக் என்ற பெல்டா குடியேற்றக்காரர் பிள்ளைகள் சங்கத்தினர் குடியேற்றங்களுக்கு செல்வதால் கலவரம் மூளும் என முடிவு செய்வதற்கு அவர்கள் யார் ? பல வகையான கருத்துக்களும் எண்ணங்களும் இருப்பதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை.

மற்றவர்களுடைய உரிமைகளுக்கு இடையூறு செய்யும் அவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது அடிப்படை ஜனநாயகப் பண்புகளை அறியாதவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் குண்டர்கள், குகை மனிதர்கள், பேராசை பிடித்தவர்கள்.

குழப்பம் இல்லாதவன்: எல்லாம் விரக்தியின் வெளிப்பாடுகள். அம்னோ/பிஎன் உறுப்பினர்களும் அவர்களைப்போன்று விரக்தி அடைந்துள்ளவர்களும் இது போன்ற வன்முறையிலும் மிரட்டலிலும் தான் இறங்குவார்கள்.

அவர்களுக்கு புத்தி மந்தம், சகிப்புத்தன்மையே இல்லை, ஜனநாயக நடைமுறைகள் தெரியாது. வரும் பொதுத் தேர்தலில் பெரிய மாற்றம் அவர்களுக்குக் காத்திருக்கிறது.

முஷிரோ: பக்காத்தான் ராக்யாட் கண்களை கட்டுவதின் மூலமும் மிரட்டுவதின் மூலமும் தேர்தலில் வெற்றி பெற அம்னோ விரும்புகிறது.

ஆனால் பக்காத்தான் மக்களைச் சந்தித்து ஆதரவு பெற விரும்புகிறது. அம்னோ பக்கம் போலீசும் தேர்தல் ஆணையம் சாயும் போது அது மேலும் சிரமமாகி விடுகின்றது. என்றாலும் பக்காத்தான் தொடர்ந்து போராட வேண்டும். பிரச்சாரம் செய்ய வேண்டும்.

முதியவன்: தவறு ஏதுமில்லை என்றால் அனாக் வாகன அணியை அம்னோ ஏன் தாக்க வேண்டும் ? பெல்டாகிராமங்களுக்குள் அது நுழைவதை ஏன் தடுக்க வேண்டும். நிச்சயம் ஏதோ கோளாறு உள்ளது.

ஜேம்ஸ்1067: மக்கள் உண்மையை அறிந்து கொள்வதை தடுக்க வன்முறையைப் பயன்படுத்துவதுவெட்கக்கேடானது. கௌரவமான மனிதர் நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவார். காரணம் அவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் நேர்மையற்ற மனிதர் உண்மையை மறைக்க எல்லா வழிகளையும் பின்பற்றுவார். இறுதியில் வாய்மையே வெல்லும். ஏனெனில் இறைவன் அதன் பக்கம் இருக்கிறார்.

விளையாட வேண்டாம்: அந்த வாகன அணி அனாக்-கின் முட்டாள்தனமான நடவடிக்கையாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசியல் எஜமானர்கள் அதன் உரிமைகளுக்கு போராட வேண்டும்.

அந்த எஜமானர்களுடைய அரசியல் உயிர் வாழ்வுக்கு அனாக் ஏன் போராட வேண்டும் ? எஜமானர்கள் அல்லவா போராட வேண்டும் ?

இறைவன் அல்ல: எல்லா பக்காத்தான் செராமாக்களிலும் கூடின பட்சம் சேதத்தை ஏற்படுத்த அம்னோகுண்டர்களுக்கும் கும்பல்களுக்கும் கூலி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்னோ கூட்டங்களில் நாம் வன்முறைகள் பற்றிக் கேள்விப்படவே இல்லை.

அபாசிர்: பக்காத்தான் வெற்றி பெறுமானால் தமக்கும்  தமது இருண்ட ரகசியங்களுக்கும் என்ன நடக்கும்என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குத் தெரியும். அதனால் மக்கள் விருப்பத்தை நிறுத்த வன்முறைகள் தொடரும். ‘மக்களுக்கு முதலிடம்’ இல்லையா நஜிப் அவர்களே !

யூஜின் டி: இந்த நாட்டில் அன்றாடம் அடாவடித்தனமும் குண்டர்தனமும் அதிகரித்து வருகின்றன. ஆனால்அதிகாரிகள் கவலை அளிக்கும் அந்த நிலையைக் கட்டுப்படுத்த ஏதும் செய்யவில்லை.

அவர்கள் ஒன்றும் செய்யாவிடில் அந்த ரௌடித்தனத்தை ஒப்புக் கொள்வதாகவே பொருள்படும்.

 

TAGS: