பெல்டா தலைவர் விலக வேண்டும் எனக் கோரும் பேரணியில் ஆயிரம் பேர் பங்கேற்றனர்

Rallyபெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தில் அரசியல் தலையீடு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அதன் தலைவர் ஈசா சமாட் பதவி துறக்க வேண்டும் என்றும் கோரி கோலாலம்பூரில் நடத்தப்பட்ட ஆரஞ்சு நிற உடைகளை அணிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பெல்டா குடியேற்றக்காரர்களுடைய பிள்ளைகளும் பங்கு கொண்ட அந்தப் பேரணி யூடிஎம் என்ற மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமைத் தொழுகைக்குப் பின்னர் தொடங்கி, ஜாலான் செமாராக்கில் உள்ள விஸ்மா பெல்டாவைச் சென்றடைந்தது.

ஈசா பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு விஷயங்களைக் கொண்ட மகஜரைக் கொடுப்பதற்காக அந்தப் பேரணி நடத்தப்பட்டதாக அனாக் (பெல்டா குடியேற்றக்காரர்கள் பிள்ளைகள் சங்கம்) அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் தமது உரையில் கூறினார்.

“நாங்கள் பெல்டா ஊழியர்களுடனோ மற்ற குடியேற்றக்காரர்களுடைய பிள்ளைகளுடனோ எதிரிகளாக இருக்க விரும்பவில்லை. நாங்கள் இங்கு முக்கியமான நிலையை எடுத்துள்ளோம்.”

“பெல்டாவில் ஈசா இருப்பது பேரிடரையும் அஸ்தமனத்தையும் கொண்டு வரும்,” என மஸ்லான் வாகனம் ஒன்றிலிருந்து பேசிய போது சொன்னார்.

“ஈசா தமது பதவியைத் துறந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கை,” என்றார் அவர்.

அந்தப் பேரணியில் பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப்-பும் பாஸ் மத்திய குழு உறுப்பினர்களான இட்ரிஸ் அகமட்-டும் ஹாட்டா ராம்லியும் கலந்து கொண்டனர்.

இதனிடையே விஸ்மா பெல்டாவில் நிர்வாகத்துக்கு ஆதரவான Majlis Belia Felda Malaysia (MBFM) என்ற இளைஞர் அமைப்பு போட்டி பேரணி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள் ‘பெல்டாவை தொந்தரவு செய்யாதீர்கள்’, ‘பெல்டா குடியேற்றக்காரர்கள் நன்றி மறந்தவர்கள் அல்ல’, ‘அனாக் துரோகிகள்’ எனக் கூறும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை வைத்திருந்தனர்.

அவர்கள் ‘பெல்டாவுக்கு இடையூறு செய்ய வேண்டாம்’, ‘கொடுமையானவர் மஸ்லான் அலிமான் கொடுமையானவர்’ என்றும் முழங்கினர்.