‘தீபக், பிரதமரின் துணைவியாருக்கு ரிம13 மில்லியனுக்கு நகைகள் வாங்கினார்’

1deepakகம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், நில விற்பனையைத் தமக்குச் சாதகமாக முடித்துத் தருவதற்குக் கைமாறாக முக்கிய பிரமுகர் ஒருவரின் துணைவியாருக்கு ரிம13 மில்லியனுக்கு நகைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று மாற்றரசுக் கட்சியான பிகேஆர் கூறுகிறது.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இத்தகவலை வெள்யிட்டார்.

தீபக்கிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சில ஆவணங்களையும் அவர் காண்பித்தார். அவை உண்மையானவை என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

TAGS: