அனைத்துலகக் குழு ஒன்று தேர்தல் பார்வையாளராக பணியாற்ற முன் வந்ததை இசி நிராகரித்தது

inayatஅனைத்துலக தேர்தல் பார்வையாளர்கள் குழு ஒன்று தனது சேவைகளை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க முன் வந்தது. 13வது பொதுத் தேர்தலுக்கு அந்தக் குழு வரவேற்கப்படுகின்றது. ஆனால் பார்வையாளர்களாக அல்ல. சுற்றுப்பயணிகளாக…..என அந்தக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

“அற்புதமான,  பணிவன்பு மிக்க, சிறந்த மக்களைக் கொண்ட இந்த அழகான நாட்டுக்கு வருவதற்கான எந்த வாய்ப்பையும் நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் பார்வையாளர்கள் என்ற எங்கள் பணி நிறைவேற்றப்பட மாட்டாது என நான் எண்ணுகிறேன்,” என முஸ்லிம் அமெரிக்க தேர்தல் பார்வையாளர் குழுப் பேச்சாளர்  டாக்டர் இனாயாட் மாலிக் கூறினார்.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உண்மை நிலை அறியும் பயணத்தை மேற்கொண்டு அவர், டாக்டர் மிர்ஸா பைக், மாஸேன் அஸ்பாஹி ஆகியோருடன் இங்கு வந்துள்ளார்.

ஜனவரி 8ம் தேதி அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு (இசி) வருகை அளித்தனர்.

தேர்தல் நேர்மையை உறுதி செய்வதற்கு அனைத்துலக பார்வையாளர்கள் முக்கியப் பங்காற்றுவதாக அவர் இன்று சுபாங்கில் நிருபர்களிடம் கூறினார். காரணம் அரசாங்கத்திடம் மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதை அது உணர்த்துகின்றது.

“வெளிப்படையான வாக்குப் பெட்டிகளைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் வெளிப்படையான தேர்தல் மிகவும் முக்கியமானது,” என்றும் அவர் சொன்னார்.

தமது குழுவினர் பாரபட்சமற்றவர்கள் என்றும் அவர்கள் எல்லாவற்றுக்கும் சொந்தப் பணத்தைச் செலவு செய்து இங்கு வந்துள்ளனர் என்றும் இனாயாட் வலியுறுத்தினார்.

இது போன்ற அழைப்பை அரசாங்கம் அனுப்பியிருந்தாலும் நாங்கள் அதனை வரவேற்போம் என்றும் அவர் சொன்னார்.