மெர்தேக்கா அரங்கத்திற்கு ஏழு இடங்களிலிருந்து ஊர்வலம் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது

Rallyசனிக்கிழமை மக்கள் எழுச்சிப் பேரணி அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்னதாக மெர்தேக்கா அரங்கத்துக்குச் செல்லும் ஏழு ஊர்வலங்களில் இணைந்து கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அந்தப்  பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பேரனி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அண்மைய உத்தரவுகளின் படி ஊர்வலம் தொடங்கும் இடங்களும்   அதற்கான பொறுப்பாளர்களும் வருமாறு:

மலாயாப் பல்கலைக்கழக பள்ளிவாசல்

நுருல் இஸ்ஸா அன்வார்(பிகேஆர்) இங் ஸ்வீ லீ (டிஏபி) அடாம் அட்லி (மலேசிய மாணவர் ஒருமைப்பாட்டு அமைப்பு)

பிரிக்பீல்ட்ஸ்

மரியா சின் அப்துல்லா (பெர்சே 2.0) எஸ் அருட்செல்வன் (பிஎஸ்எம்) சுல்கிப்லி அன்வார் உல்ஹாக் (கேலிச் சித்திர ஒவியர்)

கேஎல்சிசி

ஹுசாம் மூசா (பாஸ்) தெங் சாங் கிம் (டிஏபி) மஸ்லான் அலிமான் (அனாக், பாஸ்)

ஜாலான் சுல்தான்

இஷாக் சுரின் (முவாபாக்காட்) தான் கோக் வெய்(டிஏபி)

சென்ட்ரல் மார்க்கெட்

டாக்டர் சித்தி மரியா மாஹ்முட்(பாஸ்) தெரெசா கோக்(டிஏபி) எலிசபத் வோங்(பிகேஆர்)

சுல்தான் சுலைமான் கிளப் கம்போங் பாரு

பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் @ செகுபார்ட் (solidariti anak muda malaysia)

தேசியப் பள்ளிவாசல்

அஸ்மின் அலி (பிகேஆர்) முஹாஜிட் யூசோப் ராவா (பாஸ்) காலித் சாமாட் (பாஸ்)(டிஏபி) அடாம் அட்லி (மலேசிய மாணவர் ஒருமைப்பாட்டு அமைப்பு)

ஊர்வலங்களுக்கான தலைவர்களை பெயர் குறிப்பிடுமாறு போலீசார் கேட்டுக் கொண்டதாக ஏற்பாட்டுக் குழுவைச் சார்ந்த அரசியல் போராளி ஹிஷாமுடின் ராயிஸ் சொன்னார்

மெர்தேக்கா அரங்கத்துக்கு செல்கின்றவர்கள் தனியார் வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு அறிவுரை கூறுவதாகவும் ஹிஷாமுடின் அறிவித்தார்.

பங்கேற்பாளர்களுக்கு உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் வழங்க/விற்க விரும்புகின்றவர்கள் தங்கள் கடைகளை மகாராஜா லேலா மொனோ ரயில் நிலையம், கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தை சுற்றிலும், ஹாங் துவா எல்ஆர்டி நிலையம் ஆகிய இடங்களில் மட்டும் அமைப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அரங்கம் நிரம்பியதும் தாமதமாக வருகின்றவர்கள் அரங்கத்துக்கு வெளியில் தான் இருக்க வேண்டும்.

பேரணியின் போது பொருத்தமான முறையில் நடந்து கொள்ளுமாறும் ஹிஷாமுடின் பங்கேற்பாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

“இது அமைதியான கூட்டம். தயவு செய்து எந்த வகையான தூண்டுதலும் வேண்டாம். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்,” என அவர் மேலும் கூறினார்.