‘அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நாடு மலேசியா என கத்தோலிக்க வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜாய் அப்புக்குட்டன் கூறிக் கொண்டுள்ளார்.
சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை நாடு மதிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அவர் இன்னொரு பிரிவு தனது சமயப் புத்தகங்களிலும் வெளியீடுகளிலும் உள்ள வார்த்தைகளை இன்னொரு சமயப் பிரிவு அல்லது நிர்வாகம் தேர்வு செய்வது நியாயமாகாது. அதற்கு அடிப்படையும் இல்லை என்றும் ஜாய் சொன்னார்.
‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது சமயச் சிந்தனைகள் அடிப்படையில் ஒவ்வொரு சமயப் பிரிவும் தனது சொந்தக் கருத்துக்களைக் கொண்டுள்ளன.”
“அல்லாஹ்” விஷயம் அளவுக்கு அதிகமாக அரசியலாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நாடு மலேசியா என்றார் அவர்.
எந்த ஒரு சமய சமூகத்திற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிக்கின்றவர்களை தண்டிப்பதற்கு மலேசியாவில் பல சட்டங்கள் உள்ளன (குற்றவியல் சட்டம் 295 முதல் 298 வரை).
சிலாங்கூரில் முஸ்லிம் அல்லாதார் அந்த சொல்லை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை பற்றி அவர் கருத்துரைத்தார்.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி கூட்டரசு அரசாங்கம் 10 அம்சத் தீர்வு ஒன்றை அறிவித்தது. எல்லா மொழிகளிலும் பைபிள்களை இறக்குமதி செய்வதற்கு அது அனுமதி அளித்தது என்றும் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளுக்கு எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்றும் ஜாய் சொன்னார்.
எனவே விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் அந்த அறிவிப்பில் காணப்படும் கூட்டரசு அரசாங்க நிலைக்கு முரணாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.