புலனாய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது என வினவுகிறார் துணை முதலமைச்சர் மான்சோர்

sprm1பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் அரசாங்க ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட காமத் துன்புறுத்தல் விவகாரத்தை மூடி மறைப்பதற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்த தமது உதவியாளர் மீதான பூர்வாங்க அறிக்கையில் ‘எதனையும்  நிரூபிக்கவில்லை’ எனக் கூறியிருக்கிறார்.

மெக்காவிலிருந்து நேற்று திரும்பிய மான்சோர், 56 வயதான ஜைனல் அபிடின் சாஆட் என்ற அந்த உதவியாளருடன் நடத்தப்பட்ட பேட்டி அடிப்படையில் தமது அறிக்கை அமைந்துள்ளதாகச் சொன்னார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது உதவியாளரை குழு ஒன்று விசாரிக்குமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த மான்சோர், ‘புலனாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்றார்.sprm2

அந்த வழக்கில் ஜைனல் அபிடின் ஒரு சாட்சியே. அதனால் புலனாய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது ?” என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

முன்னாள் செபாராங் பிராய் மாவட்ட அதிகாரி ரோஸ்லான் யாஹ்யா உட்பட மேலும் இருவருடன் ஜைனல் அபிடின் ஜனவரி மூன்றாம் தேதி செபாராங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட அதிகாரிக்கு எதிராக தாம் தொடுத்த காமத் துன்புறுத்தல் புகாரை குமாஸ்தா ஒருவர் மீட்டுக் கொள்வதற்காக அந்தப் பெண்ணுக்கு 30,000 ரிங்கிட் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.