கோலாலம்பூரில் 20,000 பேர், பேரணிக்கு முன்னதாக கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது

Rallyமுக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தான் ராக்யாட்டின் வலிமையைக் காட்டுவதற்கான நிகழ்வு எனக் கருதப்படும் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் கோலாலம்பூரில் கூடுகின்றனர்.

அந்தப் பேரணியில் அதிகமான மக்கள் கூடுவர் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அதன் வழி இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும் வாக்காளர்களைக் கவர முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதற்கு அத்தகைய வாக்காளர்களுடைய ஆதரவு முக்கியமானதாகும்.Rally1

பேரணி கருப்பொருள் புரட்சிகரமானதாக இருந்தாலும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழாது இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு நஜிப் அரசாங்கம் ஒரளவு பின்வாங்கியிருப்பதாகத் தோன்றுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மெர்தேக்கா அரங்கத்தில் பக்காத்தான் பேரணி நடைபெற அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். “எத்தகைய உயிருடற்சேதமும் இல்லாமல்” பார்த்துக் கொள்வதே தங்கள் இலக்கு எனப் போலீசார் அறிவித்துள்ளனர். கலகத் தடுப்புப் போலீசையும் பயன்படுத்தப் போவதில்லை என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அதிகாரிகளுடைய புதிய போக்கிற்கு பேரணி ஏற்பாட்டாளர்கள் சோதனை வைத்துள்ளனர் என்றால் மிகை இல்லை. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் நிகழும் அந்தப் பேரணிக்கு முன்னதாக பல இடங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் மெர்தேக்கா அரங்கத்துக்கு ஊர்வலமாகச் செல்வர்.

rally2கோலாலம்பூரில் இன்று வானிலை மேகமூட்டமாக இருப்பதோடு அவ்வப்போது தூற்றல் இருக்கும்.

மெர்தேக்கா அரங்கம் இன்னும் பொது மக்களுக்கு மூடப்பட்டுள்ளது என்றாலும் பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் அரங்கத்துக்குள் பேரணிக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த அரங்கத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகளில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் ‘pasar pagi’- போன்ற சூழ்நிலை காணப்படுகின்றது.rally3

மெர்தேக்கா அரங்கத்தைச் சுற்றிலும் மக்கள் கூடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் எண்ணிக்கை ஈராயிரமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே துன் எச் எஸ் லீ போலீஸ் நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்காக போலீசார் இரண்டு கூடாரங்களை அமைத்துள்ளனர். நிருபர்களுக்கு போலீஸ் அங்கீகாரம் பெற்ற பெயர் சிட்டைகளை  வழங்குவதற்காக முகப்பு ஒன்றையும் அவர்கள் திறந்துள்ளனர்.

பேரணி தொடங்குவதற்காக நிருபர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் போலீஸ் நிலையம் மெர்தேக்கா அரங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள மஸ்ஜித் அல் ரஹ்மானில் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் காணப்பட்டார். அங்கிருந்து மெர்தேக்கா அரங்கத்துக்கு ஊர்வலமாகச் செல்ல 50க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர்.

கேஎல்சிசி வளாகத்தில் பெர்சே, அனாக், ராயல்டி போன்ற அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்த 500 போராளிகள் கூடியுள்ளனர். முற்பகல் மணி 11.45 வாக்கில் அங்கிருந்து புறப்பட திட்டமிட்டுள்ளதாக ராயல்டி செயலாளர் ஹிஷாமுடின் கசாலி சொன்னார். பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசாவும் அனாக் தலைவர் மஸ்லான் அலிமானும் அந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்குவர்.

ஜாலான் சுல்தானில் சில நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். அங்கு விழாக் கோலம் காணப்படுகின்றது.

“kuasa rakyat#KL112” என்னும் சுலோகம் எழுதப்பட்ட மஞ்சள் நிற மக்கள் எழுச்சிப் பேரணி டி சட்டைகள் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பலர் அந்த டி சட்டையை அணிந்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

பேரணியில் பங்கு கொள்ள குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் எச்சரித்துள்ள போதிலும் மஞ்சள் நிற உடை அணிந்திருந்த சில குழந்தைகள் பெற்றோர்களுடன் காணப்பட்டன.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Amcorp Mallல் 200 பேர் திரண்டுள்ளனர் அவர்களில் பெரும்பாலோர் பிகேஆர் இளைஞர் பிரிவின் நீல நிற டி சட்டையை அணிந்துள்ளனர். சிம்பாங் பூலாய் சட்ட மன்ற உறுப்பினர் சான் மிங் காய் அங்கு தென்பட்டார்.

இதனிடையே சர்ச்சைக்குரிய கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் மெர்தேக்கா அரங்கத்தின் நுழைவாயிலில் காலை மணி 10.45 வாக்கில் காணப்பட்டார்.

ஜாலான் ராஜா லாவுட்டிலிருந்து பாஸ் தலைவர்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தாம் எண்ணியிருப்பதாக அவர் சொன்னார்.