‘அரங்கத்தில் கூட்டத்தினர் எண்ணிக்கை அளவை மீறுவது குற்றமல்ல’

stadiumஒர் அரங்கத்திற்குள் வரம்புக்கு மேல் பெரிய கூட்டத்தைக் கொண்டு வருவது குற்றம் என இந்த நாட்டில் எந்தச் சட்டமும் சொல்லவில்லை என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறுகிறார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணி பெரும் கூட்டத்தைக் கவர்ந்தது என்பதற்கு அந்தப் பேரணி ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸ் தொடங்கியுள்ள விசாரணையே ஒர் அங்கீகாரம் என அவர் சொன்னார்.

“என்றாலும் கூட்ட எண்ணிக்கை அதன் வரம்புக்கு மேல் போனால் அது எந்தச் சட்டத்தின் கீழும் குற்றம் அல்ல. அது கிரிமினல் நடவடிக்கையும் அல்ல. இதைத் தவிர விசாரிப்பதற்கு போலீசாருக்கு வேறு நல்ல வேலைகள் இல்லையா ?”

அமைதியாக நடைபெற்ற அந்தப் பேரணியில் 200,000 பேர் கலந்து கொண்டிருக்கலாம் என சுரேந்திரன் மதிப்பிட்டுள்ளார்.stadium1

30,000 பேர் மட்டுமே அமரக் கூடிய மெர்தேக்கா அரங்கத்தில் அந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான மக்கள் இருந்தது உட்பட மூன்று அத்துமீறல்கள் எனக் கூறப்படுவது மீது ஏற்பாட்டாளர்களை போலீஸ் விசாரிப்பதாக டாங் வாங்கி ஒசிபிடி ஜைனுடின் அகமட் நேற்று கூறியது பற்றி அவர் கருத்துரைத்தார்.

15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளைக் கொண்டு வந்தது, தேச நிந்தனைத் தன்மையைக் கொண்ட சுவரொட்டிகளையும் பதாதைகளையும் வைத்திருந்தது ஆகியவை மற்றவை ஆகும்.