13வது பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை ‘வீழ்த்துவதற்காக’ பேரணி நிகழ்ந்தது

sabuThe Himpunan Kebangkitan Rakyat என்னும் மக்கள் எழுச்சிப் பேரணியின் நோக்கம் ஆளும் அரசாங்கத்தை ‘வீழ்த்துவதாகும்’. ஆனால் அது வரும் பொதுத் தேர்தலில் என அந்தப் பேரணி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகமட் சாபு கூறுகிறார்.

“நாங்கள் உண்மையில் வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை ‘வீழ்த்த’ விரும்புகிறோம்,” என மாட் சாபு என்றும் அழைக்கப்படும் அந்த பாஸ் துணைத் தலைவர் சொன்னார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மாட் சாபு இன்று காலை நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் பதில் அளித்தார்.

மெர்தேக்கா அரங்கத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த மாபெரும் பேரணி, பிஎன் அரசாங்கத்தை வீழ்த்தும் ஒரு முயற்சி என மகாதீர் கூறிக் கொண்டுள்ளார்.