பவானி இந்தியாவிற்கு போகவேண்டுமாம்; கூறுகிறார் அம்னோ இனவாதி!

bawani ks“பவானி உனக்கு இலவசக் கல்வி வேண்டும் என்றால், உன் தாய் நாடான இந்தியாவுக்குப் போ, அங்கு இலவசமாக கிடைக்கும்” என்று இனவாத கட்சியான அம்னோ மகளிர் பிரிவைச் சேர்ந்த நோர் ஹயாத்தி சைடின் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டப்புறங்களில் வாழும்போது கழிப்பறை பற்றிகூட அறிந்திராத இந்தியர்கள், இப்போது எல்லாம் மிகவும் அதிகமான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் என மலேசிய இந்தியர்களை தரக்குறைவாக விமர்ச்சித்துள்ளார் இந்த அம்னோ உறுப்பினர்.

“எல்லாம் லாபம்தானே…. முன்பு இந்தியர்கள் அதிகமாக தோட்டப்புறங்களில் வாழ்ந்தார்கள். கக்குஸ் என்று இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. தேசிய முன்னணியின் ஆட்சியினால்தான் முன்னேற்றமடைந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் நிறையவே கேட்கின்றனர். ” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவருடைய முகநூலில், நோர் ஹயாத்தி மூன்று அம்னோ மகளிர் உறுப்பினர்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் காணப்படுகிறது.

facebook_commentசட்டக்கல்வி மாணவி கே.எஸ். பவானி பற்றிய அவரின் எகத்தளமான கருத்துகள் குளவிக் கூட்டில் கல்லடி பட்டதுபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அம்னோ இனவாதியின் கருத்தால் கொதிப்படைந்த பலர், இதற்கு கடுமையான கண்டனங்களையும், விமர்சனங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவரான தாஜோல் அரிஃபின் ஒமார், “இந்தியர்கள் இனியும் அம்னோ வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடத்தான் வேண்டுமா?” என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

அம்னோ உறுப்பினர்கள் மனோநிலை இப்படி இருக்கும் பட்சத்தில், அம்னோ அன்றும், என்றும் இன வாதக் கட்சிதான்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் UUM-ல் நடைபெற்ற “பல்கலைக்கழக மாணவர்கள் நடப்பு அரசியலை அறிந்துள்ளனரா ?” என்னும் தலைப்பைக் கொண்ட கருத்தரங்கு UUMல் நடைபெற்றது. மொத்தம் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் கலந்து கொண்டனர்.

ஷாரிபா ஜொஹ்ராவுடன் சட்டக்கல்வி மாணவி பவானி துணிச்சலுடன் வாதம் செய்வதையும், ஷாரிபா அவரைத் திட்டுவதையும்  காட்டும் 24 நிமிட வீடியோ, யூ டியூப் இணையத் தளத்தில் சேர்க்கப்பட்டு வெகு வேகமாக பரவியதும் இணையக் குடிமக்கள் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர். பல நகைச் சுவைகளும் ஷாரிபாவை கிண்டல் செய்யும் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

எட்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில்  சேர்க்கப்பட்ட அந்த வீடியோவை இன்று காலை வரையில் மொத்தம் 665,000 பேர் பார்த்துள்ளனர்.

இணையத்தில் சூடு பிடித்துள்ள இந்த விவகாரம் வருகின்ற 13-வது பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றர்.