2012 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான அம்சங்கள் (தொடர்ச்சி)

அரசாங்கச் சேவை:

-பிரிவுகளை பொறுத்து அரசாங்கச் சேவையில் உள்ளவர்களுக்கு 7 விழுக்காடு முதல் 13 விழுக்கடு வரையில் சம்பள உயர்வு.

-ஒய்வு பெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும்.

-600,000 அரசாங்க ஒய்வூதியக்காரர்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 2 விழுக்காடு ஓய்வூதியத் தொகை உயர்வு வழங்கப்படும்.

-ஒய்வூதியத்துக்கு தகுதியில்லாத 175,000 இராணுவ வீரர்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படும்.

-மூத்த குடிமக்கள் எல்லா அரசாங்க மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் இனிமேல் வெளிநோயாளிக் கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை. எல் ஆர் டி. மோனோரயில் ஆகியவற்றில் 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும்.

.ஓய்வூதிய நிதிகள்

-தனியார் ஒய்வூதியத் திட்டத்துக்கு செலுத்தப்படும் தொகைக்கு மூவாயிரம் ரிங்கிட் வரையில் வரி நிவாரணம்.

-தனியார் ஒய்வூதியத் திட்டத்துக்கு சந்தா செலுத்தும் முதலாளிகளுக்கு வரிக் கழிவு.

-தனியார் ஒய்யுவூதிய நிதியின் வருமானத்துக்கு வரிக் கழிவு.

-5,000 ரிங்கிட்டுக்கும் அதற்குக் குறைவாகவும் சம்பளம் பெறுகின்றவர்களுக்கு முதலாளிகள் ஊழியர் சேம நிதிக்குச் செலுத்தும் சந்தாத் தொகை விழுக்காடு 12 விழுக்காட்டிலிருந்து 13 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.

-பகுதி நேரமாக படிக்க விரும்பும் அரசாங்க ஊழியர்களுக்கு கல்விக் கட்டண உதவி செய்வதற்கு 120 மில்லியன் ரிங்கிட்.

-பட்டப்படிப்பு படிக்க விரும்பும் ஆசிரியர்களுக்காக 20,000 இடங்கள் ஒதுக்கப்படும். முதல் ஆண்டில் 80 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும்.

போலீஸ்:

போலீஸ் துறையை நவீனப்படுத்த 220 மில்லியன் ரிங்கிட்டும் போலீஸ் நிலையங்கள், போலீஸ்காரர்களுக்கான வீட்டு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த 440 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.