வாக்குரிமை அளிப்பதற்காக குடியுரிமை கொடுக்கப்பட்டது என சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் அண்மையில் தெரிவிக்கப்பட்டது போல சிலாங்கூரிலும் நிகழ்ந்துள்ளதா என்பதை விளக்குமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கோரியுள்ளார்.
“சிலாங்கூர் அரசாங்கம் 2011ம் ஆண்டு நான்காவது கால் பகுதியில் மாநிலத்தில் புதிய வாக்காளர்கள் மீதான ஆய்வை நடத்தியது. அதில் 134,000 புதிய வாக்காளர்களைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.”என்றார் அவர்.
“அவர்கள் சபா ஆர்சிஐ விசாரணையில் தெரிவிக்கப்பட்ட அதே வகையைச் சேர்ந்தவர்களா ?”
“இசி-யிடமிருந்து உடனடியான பதில் எங்களுக்குத் தேவை. கடந்த காலத்தில் அது நிகழ்ந்துள்ளது. அந்த எண்ணத்துக்கு ஆதரவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.”
“இது நிகழாது என இசி எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும்,” என அன்வார் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.