லிம் கிட் சியாங்: துங்கு அடையாளக் கார்டுகளை வெளிப்படையாகக் கொடுத்தார்

immigrantமுதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கினார் எனச் சொல்லியிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை டிஏபி கடுமையாகச் சாடியுள்ளது.

துங்கு வெளிப்படையாக அதனைச் செய்தார். ஆனால் அந்த அடையாளக் கார்டு திட்டம் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

“துங்கு தேர்தல் நடைமுறையை வேரறுப்பதற்காக ஒரு போதும் குடியுரிமையைக் கொடுக்கவில்லை. ஆட்சியாளர் மாநாடு உட்பட எல்லாத் தரப்புக்களும் ஒப்புக் கொண்டவாறு 1957ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக மலாயாவில் வசிக்கும் மலாய்க்காரர் அல்லாதார் குடியுரிமையைப் பெறுவதை உறுதி செய்ய திறந்த வெளிப்படையான முறையில் அது மேற்கொள்ளப்பட்டது.”

“மகாதீர் அமைச்சரவை, ஆட்சியாளர் மாநாடு, மலேசிய மக்கள் குறிப்பாக சபா மக்களுடைய கட்டளையைப் பெற்ற பின்னர் அந்த அடையாளக் கார்டு திட்டத்தை அல்லது எம் திட்டத்தை திறந்த வெளிப்படையான முறையில் மேற்கொண்டாரா ?” என மூத்த டிஏபி தலைவர் வினவினார்.immigrant1

‘வாக்குகளுக்காக அடையாளக் கார்டுகள்’ கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது மீது சபா ஆர்சிஐ விசாரணையில் நேற்று அம்பலப்படுத்தப்பட்ட விஷயங்களை முன்னாள் பிரதமர் தற்காத்துப் பேசியுள்ளது பற்றி லிம் கருத்துரைத்தார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் பிலிப்பீனோ குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை என மகாதீர் முகமட் நேற்று கூறினார். ஆனால் அவை எல்லாம் சட்டப்பூர்வமானவை என்றார் அவர். துங்கு அதனை விட மோசமாகச் செய்துள்ளார் என்றும் மகாதீர் கூறிக் கொண்டார்.

“நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துங்கு என்னை விட மோசமாக செய்துள்ளார். அவர் தீவகற்ப மலேசியாவில் தகுதி பெறாத (அதனைப் பெறுவதற்கு) ஒரு மில்லியன்  மக்களுக்கு குடியுரிமை கொடுத்தார்.”

“அவர் அப்போது செய்தது ஏன் தவறு கருதப்படவில்லை ஆனால் நான் செய்தது ஏன் தவறு எனக் கூறப்படுகின்றது ?” என ஷா அலாமில் நேற்று நிகழ்வு ஒன்றுக்குப் பின்னர் மகாதீர் வினவினார்.

“அந்த அடையாளக் கார்டு திட்டம் அல்லது எம் திட்டம் சட்டப்பூர்வமானது என்றால் மகாதீர் ஏன் அந்த விஷயத்தை மறுத்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக சபா மக்களிடமிருந்தும் மலேசிய மக்களிடமிருந்தும் அதனை மறைத்து வைத்திருந்தார் ?” என லிம் மேலும் வினவினார்.

immigrant2நேற்று வரை ஒப்புக் கொள்ளவில்லை

1999ம் ஆண்டு லிக்காஸ் தேர்தலில் முதல் முறையாக எழுப்பப்பட்டது முதல் ஆர்சிஐ விசாரணையில் நேற்று  விஷயங்கள் அம்பலமாகும் வரையில் மகாதீர் “அடையாளக் கார்டு திட்டம் இருந்ததையே வன்மையாக  மறுத்து வந்துள்ளதை லிம் சுட்டிக்காட்டினார்.

சுதந்தர காலத்தில் மலாய்க்காரர் அல்லாதாருக்கு துங்கு அடையாளக் கார்டுகளை வழங்கியது புனிதமானது, தெள்ளத் தெளிவானது. அதில் நேர்மையற்ற போலியான, கௌரவமற்ற வாதங்களைக் கொண்ட மகாதீர் தத்துவம் ஏதும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அந்த அடையாளக் கார்டு திட்டம் அல்லது எம் திட்டம் தொடர்பில் துங்கு தம்மைக் காட்டிலும் மோசமான தேசத் துரோகத்தைச் செய்துள்ளார் என மகாதீர் பழி சுமத்துவது கோழைத்தனமானது, வெறுப்பத் தருகிறது.”

சபா ஆர்சிஐ-யில் சாட்சியமளிக்க மகாதீர் தாமாகவே முன்வர வேண்டும் எனக் கூறிய லிம், 2008 லிங்கம் ஒளிநாடா விவகாரம் மீதான ஆர்சிஐ-யில் சாட்சியமளித்த போது மகாதீர் அடிக்கடி கூறிய ‘மறந்து விட்டது’ என்ற வார்த்தையை மீண்டும் சொல்ல மாட்டார் என நான் நம்புகிறேன் என்றார்.

“யானையைப் போன்ற நினைவாற்றலைக் கொண்ட மகாதீர் அந்த ஆர்சிஐ விசாரணையின் போது 90 நிமிடங்களுக்குச் சாட்சியமளித்தார். அப்போது ‘எனக்கு நினைவில் இல்லை’ என அவர் 14 முறை சொன்னார்,” என லிம் தெரிவித்தார்.