‘பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்’

RCI pakistanபாகிஸ்தானிய இந்தியக் குடி மக்களாக மலேசியாவுக்கு வந்த இருவருக்கு எப்படி சில ஆண்டுகளில் குடியுரிமை கொடுக்கப்பட்டது என்பது சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இன்று சாட்சியமளித்தவர்களில் இருவர் பாகிஸ்தானிய பாஷ்டுன் இனத்தைச் சேர்ந்தவர். அவர் 1987ம் ஆண்டு பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கராச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு விமானத்தில் வந்தார்.

பின்னர் அங்கிருந்து அவர், கோத்தா கினாபாலுவுக்கு விமானத்தில் சென்றார். இறுதியில் தாவாவில் குடியேறினார்.

“1988ம் ஆண்டு சில மலேசியர்களுடன் வந்த பாகிஸ்தானிய ஆடவர் ஒருவர் என்னை அணுகி எனக்கு மலேசிய ஆவணங்களை கொடுக்க முன் வந்தார்,” என முகமட் கோத்தா கினாபாலுவில் ஆர்சிஐ விசாரணையில் தெரிவித்தார்.

தாம் மலேசியாவில் இருப்பதற்கு நோக்கம் கொண்டிருக்க வேண்டும் என்றும் வாக்காளாராக வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது எனக் குறிப்பிட்ட அவர் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லப்படவில்லை என்றார்.

“அவர்கள் என்னை தேசியப் பதிவுத் துறைக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதால் அவர்கள் எனக்காகப் பாரங்களைப் பூர்த்தி செய்தனர். பின்னர் அவர்கள் என்னுடைய கட்டை விரல் ரேகையையும் கையெழுத்தையும் எடுத்துக் கொண்டனர்,” என முகமட் சொன்னார்.

அடுத்து நான் என் பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தேன். எனக்கு தற்காலிக அடையாள ரசீது கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

சாதாரண மலாய் மொழியில் பதில் அளித்த முகமட் தாம் பின்னர் மலேசிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்ததாகவும் அதனைப் பயன்படுத்தி நான்கு முதல் ஐந்து முறை பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் முகமட் கூறினார்.

(இன்னும் தொடரும்)