அன்வார் வழக்கு தொடர்பில் நல்லா இன்னும் சாட்சிகள் பட்டியலை கொடுக்கவில்லை

nallaஎஸ் நல்லகருப்பன், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக கொண்டு வந்துள்ள அவதூறு வழக்கில் தமது சாட்சிகள் பட்டியலை இன்னும் நீதிமன்றத்துக்கு கொடுக்கவில்லை என அன்வாருடைய வழக்குரைஞர் அபிக் எம் நூர் கூறுகிறார்.

அந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்கு வந்த பின்னர் அபிக் மலேசியாகினியிடம் பேசினார். பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் மனைவி ஷாம்ஷிடார் தாஹாரினை ஒரு சாட்சியாக அழைக்க தாம் எண்ணிருப்பதாக நல்லகருப்பன் சொல்லவில்லை என்றார் அவர்.

“பிப்ரவரி 21ம் தேதி வழக்கு தொடங்குவதற்கு முன்னதாக எங்களுக்கு சாட்சிகள் பட்டியல் கொடுக்கப்பட்டால் போதும்,” என்றும் அபிக் தெரிவித்தார்.

அந்த வழக்கில் ஷாம்ஷிடார் சாட்சியமளிக்காமல் இருப்பதை சாட்சியமளிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜனவரி 12 மக்கள் எழுச்சிப் பேரணி நடத்தப்பட்டதாக நல்லகருப்பன் கூறிக் கொண்ட பின்னர் மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியா அதனை ‘ஹிம்புனான் ஷாம்ஷிடார்’ எனப் பெயரிட்டது.

அன்வார் குறித்து நல்லகருப்பன் சொன்னதாக சென்ற ஆண்டு மார்ச் 20ம் தேதி உத்துசான் மலேசியாவில் முதல் பக்கத்தில் வெளியான அறிக்கைகள் மீது மார்ச் 26ம் தேதி அவதூறு வழக்குப் போடப்பட்டது.