“பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்”
“குடியுரிமை கொடுக்கப்பட்ட இந்தோனிசியர்களும் பிலிப்பீனோக்களும் சிறிய பிரிவினரே என மகாதீர்
சொல்கிறார்”
ஜெஸி: குடியுரிமை வழங்கப்படுவதற்கு இவ்வளவு காலம் வசித்திருக்க வேண்டும் என்ற வரம்பு உள்ளது. கூட்டரசு அரசமைப்பின் 19(3) பிரிவு இவ்வாறு கூறுகின்றது:
“குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படுவதற்கு விண்ணப்ப தேதிக்கு முன்னதாக 12 ஆண்டுகளில் மொத்தம் 10 ஆண்டுகளுக்கும் குறையாமல் கூட்டரசில் தங்கியிருக்க வேண்டும்..”
அந்த வசிப்பிடத் தேவையைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு அரசு ஊழியர்கள் எப்படிக் குடியுரிமை வழங்கமுடியும் ? அது பெரிய அளவில் நிகழ்ந்துள்ள மோசடியாகும். சட்டத்தை அப்பட்டமாக மீறியதாகும்.
கலா: சட்ட ஆட்சி இருந்தால் நமது நடத்தைகளுக்கு வழி காட்டியாக விதிகளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனால் அந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வேண்டுமென்றே சட்டத்தைப் பலவீனமாக்கி தமது விருப்பம் போல அதனைத் திசை திருப்பிக் கொண்டிருந்தார்.
அந்நியர்கள் உடனடியாக பிரஜையாவது சட்ட விரோதமானது எனத் தெரிந்திருந்தும் அதனைச் சட்டப்பூர்வமானது எனச் சொல்வதற்கு அவருக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்.
உண்மையில் அந்த மனிதருக்கு கிரிமினல் மூளை தான்.
பார்வையாளன்: மற்ற நாடுகள் நன்கு கல்வி கற்ற/ நாட்டுக்குத் தேவைப்படுகின்ற சிறப்புத் தேர்ச்சிகளை பெற்றுள்ள அந்நியர்களுக்கு மட்டுமே குடியுரிமை தருகின்றன.
ஆனால் மை கார்டுகளையும் குடியுரிமைகளையும் வழங்குவதற்கு மகாதீர் கடைப்பிடித்த ஒரே கொள்கை அந்த அந்நியர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் குடியுரிமை பெற்ற பின்னர் பிஎன் -னுக்கு வாக்களித்து அவரைப் பதவியில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து அவரும் அவரது சேவகர்களும் மக்கள் பணத்தைப் பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்க முடியும்.
மகாதீர் தம்மை மலையாளி என அழைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் தமக்கு அரசியல் ரீதியில் சாதகமாக இருக்கும் என்பதால் அவர் அரசமைப்புக்கு உட்பட்ட மலாய்க்காரர் ஆவதைத் தேர்வு செய்தார்.
அதன் வழி இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்துடன் அவர் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
அவர் தமது 22 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியில் முஸ்லிம் அல்லாத மலேசியர்களுக்கு எதிராக இன, சமய அடிப்படையில் பாரபட்சம் காட்டினார். அதனால் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் அவருக்கு அரசியல் ஆதரவு அளித்தனர். அவரும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தார்.
வெறுப்படைந்த பாகுபாடு காட்டப்பட்ட நன்கு தேர்ச்சி பெற்ற மலேசியர்கள் மற்ற நாடுகளுக்குப் பெரும் எண்ணிக்கையில் குடியேறி விட்டனர். ஆட்களைச் சேர்ப்பது ஆற்றல் அடிப்படையில் இல்லாமல் இன, சமய அடிப்படையில் இருந்ததால் கல்வி, தொழில் நிபுணத்துவம், பொதுச் சேவைகள் ஆகியவற்றின் தரம் சரிந்தது.
இணையத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். மகாதீர், பிஎன் ஆட்கள், அவர்களது சேவகர்கள் ஆகியோர் கொள்ளையடித்த பில்லியன் கணக்கான ரிங்கிட் பற்றி இப்போது சுதேசி மலாய்க்காரர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
நேர்மையற்ற இனவாதக் கொள்கைகள் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
கெட்டிக்கார வாக்காளர்: பிரச்னைகள் எவ்வளவு கடுமையானவை என்பது நமக்கு இப்போது தெரிந்து விட்டது. அதனால் தேர்தல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். பெர்சே அரசுக்கு மிரட்டலாக இருப்பதில் ஆச்சரியமே இல்லை.
தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் நடப்பு அரசாங்கத்துக்கு மக்களிடமிருந்து கட்டளையே கிடைக்கவில்லை. ஆகவே இது சட்ட விரோதமானது.
ஸ்டார்ர்: சபாவில் இது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பெரிய நகரங்களுக்குப் போய்ப் பாருங்கள், பாஹாசா மலேசியாவில் ஒரு வார்த்தை கூடப் பேசத் தெரியாத இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் வங்காளதேசிகளும் மலேசியப் பாஸ்போர்ட்டுக்களைப் பெறுவதற்கு வரிசையாக நிற்பதைக் காணலாம்.
குடியுரிமை கொடுக்கப்பட்ட இந்தோனிசியர்களும் பிலிப்பீனோக்களும் சிறிய பிரிவினரே என மகாதீர் சொல்கிறார்.
உண்மையில் மகாதீர் எதனையோ மறைக்கிறார். அந்த விஷயத்தை ஆழமாக ஆராய வேண்டிய கடமை பக்காத்தான் ராக்யாட்டுக்கு உள்ளது. அம்னோ/பிஎன் அரசாங்கம் அந்த வேலையை ஒழுங்காகச் செய்யும் எனக் கருத முடியாது. ஏனெனில் அந்த திட்டத்தின் மூலம் நன்மை அடைந்தது அது மட்டுமே.
ஹாடி: இந்தோனிசியரான என் தாயாருக்கு 18 ஆண்டுகளுக்குப் பின்னரே அடையாளக் கார்டு கிடைத்தது. அதுவும் சிவப்பு நிற அடையாளக் கார்டு தான். அதற்கு நாங்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது தான் ஒரே காரணமாக இருக்க வேண்டும்.
அர்ச்சன்: 1990ம் ஆண்டுகளில் நான் புருணையில் வேலை செய்தேன். அப்போது என்னை ஒர் இந்தியக் குடிமகன் சந்தித்தார். அவர் தம்மிடம் உள்ள நீல நிற அடையாளக் கார்டைக் காட்டினார். அதற்கு 600 ரிங்கிட் கொடுத்ததாகவும் அவர் சொன்னார். அதனால் ஆர்சிஐ தகவல்கள் எனக்கு வியப்பைத் தரவில்லை.
கேகன்: சட்டப்பூர்வ குடிமக்களான சீனர்களும் இந்தியர்களும் சில ஆவணங்கள் இல்லாததால் நாடற்ற மக்களாக வாழ்கின்றனர். குடியுரிமைக்காக பல ஆண்டுகள் போராடுகின்றனர். ஆனால் கல்வி கற்காத அந்நியர்களுக்குக் குடியுரிமை தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மசீச-வும் மஇகா-வும் அதனை பற்றி என்ன சொல்லப் போகின்றன ?
முஷிரோ: அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் நாட்டு நிர்மாணத்துக்குப் பங்காற்றக் கூடிய சிறந்த குடியேற்றக்காரர்களை ஏற்றுக் கொள்கின்றன. மகாதீர் 100 விழுக்காடு முஸ்லிம்களாக இருக்கும் மோசமான குடியேற்றக்காரர்களை ஏற்றுக் கொண்டார். அதிகாரத்தை சட்டவிரோதமாக வைத்திருப்பதே அவரது நோக்கமாகும்.
அனோன்: மகாதீர் அவர்களே நீங்கள் இதனை வாசிக்கின்றீர்களா ?