சட்டக் கல்வி மாணவி ஒருவரைத் தாம் திட்டியதை காட்டும் வீடியோ இணையத்தில் வலம் வந்ததைத் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்க்கின் இப்போது தமது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
எதிர்க்கட்சிக்கு ஆதரவும் தேடும் பொருட்டு அந்த வீடியோ “படைப்பாற்றலுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக” அவர் கூறிக் கொண்டார்.
Suara Wanita 1Malaysia (SW1M) என்ற அரசு சாரா அமைப்பின் தலைவியுமான ஷாரிபா ஜொஹ்ரா, சென்ற மாதம் University Utara Malaysia (UUM)ன் சட்டக் கல்வி மாணவியான கேஎஸ் பவானி கருத்தரங்கில் பேசியதை நிறுத்தியதுடன் 11 முறை “listen” என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்.
“ஒர் எதிர்க்கட்சிக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவைத் தேடும் பொருட்டு அந்த விஷயம் படைப்பாற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் எங்களுடைய SW1M (Suara Wanita 1Malaysia) அரசு சாரா அமைப்பின் நலனைக் கருத்தில் கொண்டு நான் அது குறித்து மேலும் சொல்ல விரும்பவில்லை,” என நேற்று வீடியோவில் சேர்க்கப்பட்ட வீடியோ பதிவில் ஷாரிபா ஜொஹ்ரா குறிப்பிட்டுள்ளார்.
ஏழு நிமிடங்களைக் கொண்ட அந்த வீடியோவில் பொது மக்கள் கருத்துச் சொல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இப்போது ‘Kak Listen’ என அறியப்படும் ஷாரிபா ஜொஹ்ரா புன்னகையுடன் காணப்படுகின்றார். அவர் ஒரே மலேசியா சின்னம் பதிக்கப்பட்டுள்ள கோட் ஒன்றையும் அணிந்துள்ளார்.
அந்த காணொளியில் அவர், தயாரிக்கப்பட்ட வாசகத்திலிருந்து ஒர் அறிக்கையை வாசிக்கிறார். (அது எந்தப் பகுதியும் கத்தரிக்கப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது):
“அன்புள்ள மலேசியர்களே, நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். கேளுங்கள், கேளுங்கள், கேளுங்கள். (listen, listen and listen). என்னை விளக்குவதற்கு அனுமதியுங்கள். தயவு செய்து கேளுங்கள். பின்னர் சிந்தித்துப் பாருங்கள்,” என அவர் தொடங்குகிறார்.
“முதலாவதாக அந்த இளம் பெண் பவானியை அவர் சொன்னது எதுவாக இருந்தாலும் கருத்தரங்கிற்கு முன்பும் கருத்தரங்கின் போதும் கருத்தரங்கிற்குப் பின்னரும் அவர் செய்தது எதுவாக இருந்தாலும் நான் மன்னிக்கிறேன்.”
“கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு உண்மைகளை அறிந்து கொள்ள முயலாமல் கடுமையான வார்த்தைகளை வீசிய மற்றவர்களுக்கும் நான் அதே மன்னிப்பை நீட்டிக்கிறேன்.”
ஷாரிபா ஜொஹ்ரா, பவானியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பல மாணவர் அமைப்புக்களும் அரசியல்கட்சிகளும் கோரியுள்ளன.
“அந்த வீடியோ அரசியல் ரீதியில் திருத்தப்பட்டது” என வருணித்த ஷாரிபா ஜொஹ்ரா, அது தமதுகுடும்பத்துக்குக் குறிப்பாக தமது இளம் பிள்ளைகள் மீது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதாகச் சொன்னார்.
“பொறுப்பற்ற தனிநபர்கள், அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடமிருந்து எனக்கு குறுஞ்செய்தி வாயிலாக மிரட்டல்கள் அனுப்பப்படுகின்றன. அதனால் நான் என் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.”
“எங்கள் அலுவலகமும் மறைவுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. எங்களுக்கு வாசல் கதவுகளுக்கு அருகே மருட்டல்கள் விடுக்கப்படுகின்றன.