பாஸ் உலாமா கர்பாலிடம் சொல்கிறது: ‘எங்களை நீங்கள் மாற்ற முடியாது’

karpal‘அல்லாஹ்’ சர்ச்சைக்கு முடிவு கட்டுமாறு பாஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் பாஸ் உலாமா தலைவர் ஹருண் தாயிப், பாஸ் கட்சி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-குடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வருகிறார்.

கர்பாலின் கோரிக்கையை தாம் பரிசீலிக்கப் போவதில்லை என்று ஹருண் பெரித்தா ஹரியானிடம் கூறினார்.

“அது அவரது வேலை. நாங்கள் syura மன்றத்தில் முடிவு செய்துள்ளோம். பாஸ் உள் விவகாரங்களில்  தலையிட வேண்டாம் என நான் கர்பாலைக் கேட்டுக் கொள்கிறேன்.”

“அவர் வேண்டுகோள் விடுக்கலாம். அது அவரது உரிமை. ஆனால் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் எங்கள் சமயப் போதனைகளை நாங்கள்  பின்பற்றுவோம்,”  என ஹருண் சொன்னதாக அந்த மலாய் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.karpal1

syura மன்றத்தில் முடிவு  சரியானது என்றும் அது மாற்றப்பட முடியாது என்றும் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் -னும் பெரித்தா ஹரியானிடம் கூறினார்.

அந்த முடிவை கட்சியின் எல்லாத் தலைவர்களும் ஆதரவாளர்களும் ஆதரித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் சமய நூல்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற  syura மன்ற முடிவை மறு பரிசீலினை செய்யுமாறு கடந்த வாரம் கர்பால், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு முஸ்லிம் அல்லாதார் அனுமதிக்கப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் எடுத்த இணக்கமான முடிவை syura மன்றம் பின்பற்ற வேண்டும் என்றும் கர்பால் விரும்புகிறார்.