பைபிள் எரிப்பு விழா நடக்கவில்லை

bibleபட்டர்வொர்த்தில் இன்று நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய பைபிள் எரிப்பு விழா நிகழவில்லை.

பைபிள் எரிப்பு விழா நடைபெறவிருந்த தேவான் டத்தோ அகமட் படாவிக்கு நிருபர்கள் காலை மணி 9.30 வாக்கில் சென்ற போது அங்கு பல போலீஸ் அதிகாரிகள் காவல் சுற்றுப் பணிகளை மேற்கொண்டிருந்ததைக் கண்டனர்.

அதற்கு அரை மணி நேரம் கழித்து போலீஸ் அதிகாரி ஒருவர், பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நிருபர்களைச் சந்திப்பார் எனக் கூறினார்.

“நிச்சயமாக ‘. ‘அது நடக்கவில்லை’ (‘Tak jadi’) என புன்னகையுடன் நிருபர்களிடம் சொன்னார்.

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்துக்குச் செல்லுமாறு அவர் நிருபர்களைக் கேட்டுக் கொண்டார்.

அந்த இடத்தில் இருந்த செபெராங் பிராய் நகராட்சி மன்ற உறுப்பினர் பிரான்ஸிஸ் ஒங், இன்றைய தினம் மன்றத்தைச் சேர்ந்த 30 அமலாக்க அதிகாரிகள் கடமையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

“அந்தக் குழுவினர்-யாரும் இருந்தால்- மண்டபத்திற்கு வெளியில் உள்ள திடலில் கூடும் சாத்தியம் இருந்ததால் அமலாக்க அதிகாரிகள் பல இடங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்,” என்றார் அவர்.

கடந்த திங்கட்கிழமை, புனித மார்க்ஸ் ஆங்கிலக்கன் தேவாலய ரெவெரண்ட் ஜான் கென்னடி, இன்றைய பைபிள் எரிப்பு விழாவில் பங்கு கொள்ளுமாறு பொது மக்களை அழைக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்றை தமது அஞ்சல் பெட்டியில் கண்டு பிடித்த பின்னர் போலீஸில் புகார் செய்தார்.bible1

போலீசார் நன்றி

அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றவர்கள் மீதும் அத்தகைய வதந்திகளைப் பரப்புகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்துல் ரஹிம் எச்சரித்தார்.

பாஹாசா மலேசியா பைபிள்களை எரிக்குமாறு முஸ்லிம்களை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கேட்டுக்  கொண்டிருந்த போதிலும் அந்த விழாவில் தனக்கு சம்பந்தமில்லை என பெர்க்காசா கூறியது.

அந்த நிகழ்வு நடைபெற்றிருந்தால் அதனைப் பற்றி நேரடியாக எழுதுவதற்கு பிரபல வலைப்பதிவாளரான  அனில் நெட்டோ திட்டமிட்டிருந்தார்.

நாடு இப்போது எதிர்ந்நோக்கும் கடுமையான பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு நடத்தப்படும் நாடகமே பைபிள் எரிப்பு என அவர் சொன்னார்.

“பெரும்பாலான மலேசியர்கள் மற்ற சமயங்களைச் சார்ந்தவர்களை மிகவும் மதிப்பதாகவே நான் கருதுகிறேன். நம்மிடையே உள்ள சில வெறியர்களைக் காட்டிலும் அவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்.”

இதனிடையே அந்த நிகழ்வு நடக்காதது குறித்து தாம் நன்றி கூறுவதாக அப்துல் ரஹிம் கூறியிருக்கிறார்.

“இந்த நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடிய சமய, பண்பாட்டுப் பிரச்னைகளை எழுப்ப வேண்டாம் என இங்கு பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுள்ள தலைமைப் போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன்,” என அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.