வேத நூல்கள்: நீங்கள் கற்றுக் கொள்ள முடியும் போது அவற்றை ஏன் எரிக்க வேண்டும் ?

masபட்டர்வொத்தில் பைபிள் எரிப்பு நடவடிக்கை நிகழவில்லை என வதந்திகள் பரவிய  வேளையில் கோலாலம்பூர் கேஎல்சிசி பூங்காவில் 40 பேர் கூடி அந்த நிகழ்வுக்கு எதிர்ப்புக் காட்டும் வகையில் பல புத்தகங்களை-பெரும்பாலும் சமய வேத நூல்கள்- வாசித்தனர்.

“ஒரு புத்தகத்தை குறிப்பாக மக்களில் ஒரு பிரிவு புனிதகாகக் கருதும் நூல் ஒன்றை  எரிக்கும் யோசனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுயேச்சை இதழியல் துறை மய்ய நிர்வாக அதிகாரி மாஸ்ஜாலிசா ஹம்சா கூறினார்.

“நாம் புத்தகங்களை எரிப்பதற்கு பதில் புத்தகங்களை கொண்டாட வேண்டும். வாசிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும். நாம் நமது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்..”

“என்னைப் பொறுத்த வரை யாராவது எரிக்கப் போவதாகச் சொன்னால் வாசிக்கப் போவதாக நான் பதில் சொல்வேன். நீங்கள் பைபிளை எரிக்கப் போவதாகச் சொன்னால் பைபிளை வாசிக்கப் போவதாக நான் சொல்வேன்.”mas1

அவர்கள் செய்வதை நான் தடுப்பதற்கு அதுவே சிறந்த வழி,” என அவர் வேத நூல்களை வாசிக்கும் நிகழ்வில் நிருபர்களிடம் கூறினார்.   அந்தப் பூங்காவில் பைபிளை வாசிக்கப் போவதாக ஜனவரி 23ம் தேதி தமது முகநூல் பக்கத்தில் மாஸ்ஜாலிசா எழுதியிருந்தார். தங்கள் சொந்தப் புத்தகங்களுடன் வந்து அதில் கலந்து கொள்ளுமாறு அவர் மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று நண்பகல் வரையில் அவரது பதிவை 400 பேர் பார்த்துள்ளனர்.