அண்மையில் போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த சி சுகுமாரன் குடும்பத்தினர், அந்த விவகாரம் மீது மரண விசாரணை நடத்துவதற்குப் போலீசார் முன் வந்ததை நிராகரித்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு முழுமையான கொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
“சுகுமாரன் இறந்தது தொடர்பில் மரண விசாரணை நடத்தப்படுவதை சி சுகுமாரான் குடும்பத்தினர் முற்றாக நிராகரிக்கின்றனர்.”
“கொலை தொடர்பில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு போதுமான ஆதாரம் இருக்கும் வேளையில் ஏன் மரண விசாரணையை நடத்த வேண்டும் ?”
இந்த விவகாரத்தில் சுகுமாரன் போலீஸ்காரர்களினால் விரட்டப்பட்டு விலங்கு மாட்டப்பட்டு, மஞ்சள் தூள் வீசப்பட்டு, அடிக்கப்பட்டு மரணமடைந்ததைக் கூறுவதற்கு நேரில் பார்த்த சாட்சிகள் முன்வந்துள்ளனர்,” என அந்தக் குடும்பத்தின் வழக்குரைஞர்களான என் சுரேந்திரனும் லத்தீப்பா கோயாவும் கூறினர்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் என குடும்பத்தினர் விரும்புவதாகவும் அவர்கள் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்தனர்.