‘நீதியையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு நாம் நம்பியுள்ள அமைப்புக்களின் வெட்கக் கேடான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்’
எம்ஏசிசி மூவர் மீது கொள்ளை குற்றச்சாட்டு
அரமெகெடோன்: எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தமது ஆயுட்காலத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் கார் நிறுத்தும் கட்டணத்தை செலுத்தாது குற்றத்தை மட்டும் தான் செய்வார் என நான் நினைத்திருந்தேன்.
ஆனால் கொள்ளை என்னால் நம்பவே முடியவில்லை. நாட்டை ஊழலிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நபர்கள் தான் அவர்கள். இ ந்தச் சம்பவம் பெரிய பனிப்பாறையின் நுனி என்பது நிச்சயம்.
உஷ்உஷ்: இது தான் நமது எம்ஏசிசி அதிகாரிகளின் தரம் என்றால் அரச மலேசியப் போலீஸ் படை, மற்ற அமலாக்க அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து நாம் எதனை எதிர்பார்க்க முடியும். கற்பனை செய்து பாருங்கள்.
இம்சியா: எம்ஏசிசி முழுமையாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
விஜய்: நீதியையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு நாம் நம்பியுள்ள அமைப்புக்களின் வெட்கக் கேடான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
அந்த 900,000 ரிங்கிட் கொள்ளையில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். இதை விட அதிகமாக நாட்டிலிருந்து உறிஞ்சப்பட்ட மற்ற சம்பவங்களைப் பற்றி என்ன சொல்வது ?
இன்னொரு முக்கியமான விஷயம். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ள அந்தக் கொள்ளைச் சம்பவத்தை புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகமே கவனிக்கவிருப்பதாகும். சிலாங்கூரில் உள்ள அதன் அலுவலகம் அல்ல. ஏன் ?
தனது சொந்த அதிகாரிகளைக் கூட சட்டத்துறைத் தலைவர் அலுவலக நம்பவில்லை எனத் தோன்றுகிறது. அதனால் என்ன ? சட்டத்துறைத் தலைவரையே யாரும் நம்புவதில்லை.
நியாயமானவன்: இது தான் மலேசியாவின் பரிதாபகரமான நிலையாகும். தகுதி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சேவகம் புரிகின்றவர்களுக்கே கிடைக்கிறது.
அம்னோ அதனைச் செய்ய முடியுமானல் நாமும் அதனைச் செய்ய முடியும் என்றும் தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்று எம்ஏசிசி அதிகாரிகள் நினைத்திருக்கக் கூடும். அந்தச் சம்பவம் கேமிராவில் பதிவாகும் என்றும் மற்ற தரப்பு புகார் செய்யும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது எல்லா இடத்திலும் நிகழ்கிறது. எம் ஏசிசி, நீதித் துறை, அரச மலேசிய போலீஸ் படை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றிலும் ஒவ்வொரு அரசாங்கத் துறையிலும் அது நிகழ்கிறது.
எல்பிஎல்: இளம் வயதில் அந்த அதிகாரிகள் எம்ஏசிசி-யில் உதவி சூப்பரிடெண்ட் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தாங்கள் தப்பித்து விடலாம் என அவர்களுக்கு தெரியும். இல்லை என்றால் அவர்கள் அதனைச் செய்திருக்கவே மாட்டார்கள்
துரதிர்ஷ்டவசமாக எங்கோ தவறு நடந்து விட்டது. ஒவ்வொரு அரசாங்கத் துறையிலும் இது போன்ற் அழுகினப் போன ஆப்பிள்கள் இருக்கும் போது நாம் யாரிடம் தான் செல்வது ?