500 தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி, சிலாங்கூர் மாநில அரசு கட்டுகிறது

asramaவெப்ப மண்டல காட்டை தங்களுடைய வெறும் கைகளாலேயே வெட்டி அழித்து நாடாக்கிய இந்திய தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தேவைப்படும் கல்வி வசதிகளைச் செய்து தருவதற்கு மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் அளிக்கும் நோக்கத்தின் ஓர் அங்கமாக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தோட்டப்புற மாணவர்கள் 500 பேர் தங்குவதற்கான தங்கும் விடுதி கட்டுமான திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகம் செய்யவிருக்கிறது.

இத்திட்டத்தின் அறிமுக விழா பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நாளை சனிக்கிழமை (பெப்ரவரி 2, 2013) காலை மணி 9.30 க்குத் தொடங்குகிறது.

K_arumugamஇத்திட்டம் மேலும் விரிவடைய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தமளிக்க வேண்டும். அதனைச் செய்வதற்கு மக்களின் ஆதரவு பெருமளவில் தேவைப்படுகிறது. ஆகவே, நாளை நடைபெறவிருக்கும் இந்த அறிமுக விழாவிற்கு அனைவரும் திரண்டு வருமாறு  சுவாராம் தலைவர் கா.ஆறுமுகம் அழைப்பு விடுக்கிறார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் வரலாறு படைக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இது “கொஞ்சம் பாத்து கொடுங்க சார்”, என்று கெஞ்சும் நிகழ்ச்சியல்ல. “இதைப்போல் செய்” என்று மத்திய அரசுக்கு தீவிர அழுத்தம் அளிக்கும் நிகழ்ச்சியாகும். அந்த அழுத்தம் மக்களிடமிருந்து வர வேண்டும். அக்கடைமையை ஆற்ற திரண்டு வாருங்கள்.

தேதி: பெப்ரவரி 2, 2013 (சனிக்கிழமை)
நேரம்: காலை மணி 9.30
இடம்: தோட்ட மாளிகை, ஜாலான் டெம்ளர், பெட்டாலிங் ஜெயா.

அந்நிகழ்ச்சியின் இன்னொரு அங்கமாக “தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பும் போராட்டங்களும்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கும் நடைபெறும் என்று கா. ஆறுமுகம் கூறினார்.