கூட்டரசுப் பிரதேச விருதுப் பட்டியலில் சாமிவேலு முதலிடம் வகிக்கிறார்

samyஇன்று கூட்டரசுப் பிரதேச தினமாகும். அதனை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ள 283 பேர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இந்தியா, தெற்காசியாவுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் எஸ் சாமிவேலு தலைமை தாங்குகிறார்.

அவருக்கு Darjah Seri Utama Mahkota Wilayah (SUMW) விருது கொடுக்கப்பட்டுள்ளது. அது  Datuk Seri Utama என்னும் பட்டத்தை வழங்குகிறது.

கோலாலம்பூர், சிலாங்கூர் சீன வர்த்தக தொழிலியல் சங்கத் தலைவர் செங் ஹெங் ஜெம், பெல்டா தலைவர் முகமட் ஈசா அப்துல் சாமாட் ஆகியோருக்கும் அதே விருது கொடுக்கப்பட்டுள்ளது.

டத்தோ ஸ்ரீ பட்டத்தை வழங்கும் Darjah Seri Mahkota Wilayah (SMW) விருது எட்டுப் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

டத்தோ பட்டத்தை வழங்கும் Panglima Mahkota Wilayah (PMW) விருதை 41 பேர் பெறுகின்றனர்.

28 பேருக்கு Johan Mahkota Wilayah (JMW) விருதும் 45 பேருக்கு esatria Mahkota Wilayah (KMW) விருதும் 73 பேருக்கு Ahli Mahkota Wilayah (AMW) விருதும் 85 பேருக்கு Pingat Pangkuan Mahkota Wilayah (PPW) விருதும் கொடுக்கப்பட்டுள்ளன.

பெர்னாமா