செயல்படவில்லை என்று அனாக் கூறுவதற்கு ஹுலு சிலாங்கூர் போலீஸ் மறுப்பு

1feldaபிப்ரவரி 4-இல், பெல்டா சுங்கை தெங்கியில் பாஸ்-ஆதரவு என்ஜிஓ ஒன்று நடத்திய ஒரு செராமாவில் குழப்பம் ஏற்படுவதை போலீசார் தடுக்கவில்லை என்று கூறப்படுவதை ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரிண்டெண்டண்ட் நொரெல் அஸ்மி யாஹ்யா மறுத்தார்.

அந்நிகழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு 30 போலீசாருக்கு  உத்தரவிட்டிருந்ததாக நெரெல் அஸ்மி கூறினார்.

“நிலவரம் ‘சூடாகிக்கொண்டிருந்தபோது’ நாங்கள் அங்கிருந்தோம். நாங்கள்தான் அதைத் தணித்தோம்”, என்று அவர் கூறினார். போலீஸ் அங்கு இல்லையென்றால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கும் என்றார்.

1felda mazlanஅனாக் அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் (இடம்), அனாக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அம்னோவையும் பெர்காசாவையும் சேர்ந்த “காலிகள்” கலாட்டா செய்வதை போலீசார் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருப்பது பற்றி வினவியதற்கு நேரெல் அஸ்மி இவ்வாறு கூறினார்.

எதிர்ப்பாளர்கள் செராமாவில் குழப்பம் விளைவிக்க போலீசார் இடமளித்தார்கள் என்று கூறப்பட்டதை அவர் மறுத்தார்.

போலீசார், பெல்டா, ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் கூடிப்பேசியதாகவும் அப்போது மஸ்லான் மேடை ஏறிப் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் நோரெல் அஸ்மி தெரிவித்தார்.

ஆனால், மஸ்லான் அதன்படி நடந்துகொள்ளவில்லை. அதனால்தான் குழப்பம் ஏற்பட்டது என்றாரவர்.