பொர்ன்திப் வராததற்கும் பிரதமருக்கும் சம்பந்தமுண்டு என்கின்றனர் வழக்குரைஞர்கள்

porntipபோலீஸ் முரட்டுத்தனத்துக்கு இலக்கானதாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனையை நடத்த டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனாந்த் வராமல் போனதற்கு நஜிப் அப்துல் ரசாக் காரணம் என்ற தாங்கள் சொல்வதில் சுகுமார் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் உறுதியாக நிற்கின்றனர்.

அந்தத் தகவலைத் தங்களுக்கு வழங்கிய வட்டாரம் ‘உடைக்க முடியாதது, அதிகாரப்பூர்வமானது’ என வழக்குரைஞர்களான லத்தீப்பா கோயாவும் என் சுரேந்திரனும் கூறினர்.

அந்தத் தாய்லாந்து தடயவியல் உடற்கூறு நிபுணர் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையும் அந்த விவகாரம் மீது அவரது நாட்டின் நீதி அமைச்சும் வெளியிட்டதாகக் கூறப்படும் ஒர் ஆவணத்தின் உள்ளடக்கமும் பிரதமர் தெரிவித்த மறுப்பு செய்தியிலிருந்து மாறுபட்டுள்ளதாக அவர்கள் வலியுறுத்தினர்.

அந்த இரு விஷயங்களும் தாய்லாந்து, மலேசிய அரசாங்கங்களுக்கு இடையில் தொடர்புகள் நிகழ்ந்துள்ளதைக் காட்டுவதாக அந்த வழக்குரைஞர்கள் குறிப்பிட்டனர்.

“அரசதந்திர மொழியில் சொன்னால் சுகுமார் மீது இரண்டாவது சவப்பரிசோதனை நடத்தும் நோக்கங்களுக்கு டாக்டர் பொர்ன்திப் மலேசியாவில் வரவேற்கப்பட மாட்டார் என்பதே மலேசிய அரசாங்கத்தின் தெளிவான செய்தியாகும்,” என அவர்கள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.